மேடையில் அஜித் தயாரிப்பாளரிடம் சண்டைக்கு நின்ற தேவி ஸ்ரீ பிரசாத்… என்ன நடந்தது?

by Akhilan |
Devi sri prasad
X

Devi sri prasad

Devi Sri Prasad: புஷ்பா2 திரைப்படத்தின் புரோமோஷன் மேடையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கோபமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் இதுவரை 100 படங்களினை இசையமைத்து இருக்கிறார். தேவி என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான தேவி ஸ்ரீ பிரசாத் தமிழ் ரசிகர்களிடம் மிக பிரபலமானார். கோலிவுட் படமான பத்ரியில் இசையமைத்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: வர்ஷினி ‘பலியாடு’ ஆகிட்டாங்க… எவிக்சன் குறித்து ‘பிரபலம்’ ஓபன் டாக்!

தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கில் நிறைய படங்களை இசையமைத்து வருகிறார். தற்போது புஷ்பா2, குட் பேட் அக்லி படங்களினை இசையமைத்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் பாடல்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவானது.

இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் விலக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இவருக்கு பதில் அனிருத் அல்லது ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் கசிந்தது. இன்னும் ஒரு மாதமே ரிலீஸ் இருக்கும் நிலையில் இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அடைந்தது.

இதையும் படிங்க: கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் டோலிவுட்டின் டான்சிங் குயின்?!.. அதுவும் இந்த நடிகருக்கு ஜோடியாவா?..

பாடல்களை நான் சரியான நேரத்திற்கு கொடுப்பதில்லை என சொல்லுறீங்க. பேக்ரவுண்ட் மியூசிக் நேரத்தில் கொடுப்பதில்லை என்றும் சொல்றீங்க. நான் மூவி ஷோவுக்கு நேரத்திற்கு வர்றதில்லை சொல்றீங்க. என் மீது உங்களுக்கு அதிக அன்பும் இருக்கிறது. இருந்தும் புகார்கள் தான் அதிகம் வருவதாக பேசி இருக்கிறார். இந்த பேச்சு வைரலாகி வரும் நிலையில் இதன் காரணமாக தான் குட் பேட் அக்லி விலகி இருக்கலாம் எனவும் தகவல்கள் கசிந்து இருக்கிறது.

Next Story