குபேரா திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நேற்று வெளியான நிலையில், அதிலும் சத்தம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் தேவி ஸ்ரீ பிரசாத்தை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் நடிகர் தனுஷ். ஹீரோவாக அறிமுகமாகி பின்னர் பாடகர், இசையமைப்பாளர் என்ற வரிசையில் தற்போது இயக்குனராகவும் அசத்தி வருகின்றார். முதன்முதலாக பவர் பாண்டி என்கின்ற திரைப்படத்தை இயக்கினார்.
அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நடிகர் தனுஷ் தன்னுடைய 50-வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதையும் படிங்க: எனர்ஜி ஏத்த இப்படியா? ஒரு நாளைக்கு எத்தன லிட்டர் பாருங்க.. அந்த சமாச்சாரமுமா? ஜீவனின் அட்டகாசம்
இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த இயக்கங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார் நடிகர் தனுஷ். அதன்படி தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்து விட்டார். முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
இந்த திரைப்படத்திற்கு அடுத்ததாக தன்னுடைய நான்காவது படமான இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்தும் வருகின்றார். இப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. இப்படி தன்னுடைய இயக்கத்தில் கவனம் செலுத்தி வரும் நடிகர் தனுஷ் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வருகின்றார்.
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருக்கின்றது. வருகிற டிசம்பர் 27ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நேற்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள். இதில் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் தனுஷ் காட்சியளித்தார். மேலும் ராஷ்மிகா மந்தனா மிகவும் எளிமையான தோற்றத்திலும் நாகார்ஜுனா இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது போன்று காட்டப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: எனர்ஜி ஏத்த இப்படியா? ஒரு நாளைக்கு எத்தன லிட்டர் பாருங்க.. அந்த சமாச்சாரமுமா? ஜீவனின் அட்டகாசம்
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தனுஷின் கெரியரில் ஒரு வித்தியாசமான திரைப்படமாக இப்படம் இருக்கும் என்று கூறி வந்தார்கள். மறுபுறம் இந்த திரைப்படத்திலும் சத்தம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் ஏற்கனவே கங்குவா திரைப்படத்தில் காது செவிடாகும் அளவிற்கு இசையமைத்திருந்த நிலையில் அதே போல் தான் இந்த திரைப்படத்திலும் செய்திருக்கிறாரா? என்று கூறி வருகிறார்கள். மேலும் கங்குவா படத்தை பார்த்தாவது குபேரா திரைப்படத்தின் படக்குழுவினர் சற்று உஷாராகிக் கொள்ளுங்கள் என்று எச்சரித்து வருகிறார்கள்.
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…