சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் செம ஃபன்!. வெளியானது டிரெய்லர் வீடியோ!..

DD Nextlevel: காமெடி வேடங்களில் நடித்து வந்த சந்தானம் ஒரு கட்டத்தில் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அப்படி அவர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அப்போதுதான் லொள்ளு சபா புகழ் ராம் பாலாவின் இயக்கத்தில் தில்லுக்கு துட்டு படத்தில் நடித்தார்.
ஹாரர் காமெடி வகையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்க, அடுத்து தில்லுக்கு துட்டு 2 வெளியானது. இந்த படமும் ஹிட். அதேநேரம், சந்தானம் ஹீரோவாக நடித்த மற்ற கதைகள் ஓடவில்லை. இப்போது, சிம்புவின் புதிய படத்தில் நடிக்க சந்தானம் ஒப்புக்கொண்டிருக்கிறார். எனவே, சந்தானத்தை மீண்டும் காமெடியனாக பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில், சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரெய்லர் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சந்தானம், யாஷிகா ஆனந்த், கீத்திகா, கவுதம் மேனன், கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் சந்தானம் யுடியூப்பில் புதிய படங்களை விமர்சனம் செய்பவராக வருகிறார். இதில் கோபப்பட்டு ஒரு பேய் (செல்வ ராகவன்) சந்தானத்தை ஒரு சினிமாவுக்குள் அனுப்பிவிடுகிறது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் நீ விமர்சனமே பண்ணக்கூடாது என சரண்டர் ஆகு என சொல்கிறது.
அந்த சினிமாவுக்குள் சந்தானம் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார், பேய்களை சமாளித்து எப்படி வெளியே வந்தார் என்பதை காமெடி கலந்த திகில் படமாக கொடுத்திருக்கிறார்கள். இந்த படத்திலும் சந்தானம் - மொட்டை ராஜேந்திரன் காமெடி நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருப்பது டிரெய்லர் வீடியோவை பார்க்கும்போதே தெரிகிறது.
அதிலும், இயக்குனர் கவுதம் மேனனை செமயாக கலாய்த்திருக்கிறார்கள். அதிலும் கவுதம் மேனன் காக்க காக்க சூர்யா போல கடற்கரையில் ‘உயிரின் உயிரே’ என பாடிக்கொண்டே ஓடுவது ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்திருக்கிறது. ஏற்னவே சந்தானத்தை வைத்து டிடி ரிட்டன்ஸ் ஹிட் கொடுத்த பிரேம் ஆனந்தே இந்த படத்தையும் இயக்கியுள்ளார். நடிகர் ஆர்யா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் மே 16ம் தேதி வெளியாகவுள்ளது.