அக்கட தேச ரசிகர்களை காப்பாற்றிய தனுஷின் அந்த படம்...! பரிதாபத்துக்குரிய நிலையில் தெலுங்கு சினிமா....
தமிழ் சினிமாவில் சுக்கிர திசை நன்றாக இருக்கும் நடிகர் யாரென்றால் இப்போதைக்கு நடிகர் தனுஷ் தான். இவரின் காட்டில் தான் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் யாரும் எதிர்பாராத அளவில் அள்ளிக் கொண்டிருக்கிறது.
3 வருடங்களுக்கு பிறகு தமிழில் வரும் படம் இது தான். இதை அடுத்து நானே வருவேன், வாத்தி போன்ற படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.மேலும் கேப்டன் மில்லர் என்ற படத்தின் படப்பிடிப்பிலும் பிஸியாக இருக்க போகிறார் நடிகர் தனுஷ்.
இதையும் படிங்கள் : கோப்ரா பட இயக்குனர் ரெட் கார்டு விவகாரம்….! சொந்த செலவில் சூனியம் வைக்க காத்திருக்கும் பிரபலம்…!
இவர் மட்டுமில்லை தமிழ் சினிமாவே ஓரளவுக்கு நல்ல நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் தெலுங்கு சினிமாவோ கவலை கிடமான நிலையில் இருப்பதாக செய்திகள் பரவலாக வருகின்றது. ஒரு பக்கம் தயாரிப்பாளர்கள் சார்பாக ஸ்டிரைக், மறுபக்கம் ரிலீஸ் ஆகும் படங்கள் எல்லாம் தோல்வி என எதிர்மறையான விளைவுகளையே சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள தியேட்டரில் சும்மா தானே இருக்கு என்பதற்காக தனுஷ் நடித்த மூணு என்ற படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். படம் சும்மா சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து போய்க் கொண்டிருக்கிறதாம். கொஞ்ச நாள்களாகவே நல்ல படத்தை பார்க்காத தெலுங்கு ரசிகர்களுக்கு தனுஷின் மூணு படம் ட்ரீட் வைத்த உணர்வை ஏற்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியது.