More
Categories: Cinema News latest news

தனுஷ் 50 படத்தின் கதை, நடிகர்கள் குறித்த புது அப்டேட்.. சுவராஸ்யமா இருக்கே!..

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அவருடைய முதல் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் அதற்கு பிறகு வந்த திருடா திருடி, காதல் கொண்டேன் போன்ற திரைப்படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன.

தொடர்ந்து தனது நடிப்பை மேம்படுத்தி வந்த தனுஷ் தற்சமயம் தமிழ் சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். 3, வேலை இல்லா பட்டதாரி போன்ற படங்கள் அவரது திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படங்களாகும்.

Advertising
Advertising

dhanush1

தற்சமயம் பாலிவுட் ஹாலிவுட் வரை சென்று நடித்த தமிழ் நடிகராக தனுஷ் இருக்கிறார். கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் ஒரு படம் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தை தனுஷே இயக்குகிறார். இதற்கு முன்பு படிக்காதவன், மாப்பிள்ளை, ஆடுகளம் போன்ற படங்களை இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்திருந்தார்.

தனுஷ் 50 படத்தின் கதை:

இப்போது மீண்டும் அவர்களுடன் கூட்டணி போட்டுள்ளார். இந்த படம் குறித்து தற்சமயம் சில முக்கியமான அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன. மூன்று சகோதரர்களை மையப்படுத்தியே இந்த படத்தின் கதை அமைந்துள்ளது என கூறப்படுகிறது. நானே வருவேன் படத்தில் உள்ளது போல ஷார்ட் ஹேரில் தனுஷ் இந்த படத்தில் நடிக்கிறார்.

Dhanush at the Filmfare Awards South 2017 Press Meet

மேலும் படத்தில் எஸ்.ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன்,காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். சந்தீப் கிஷன் தனுஷிற்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். துஷாரா விஜயன் தனுஷிற்கு தங்கையாக நடிக்கிறார்.

அபர்ணா பாலமுரளி தனுஷிற்கு ஜோடியாக நடிக்கிறார். ஜூலை 1 முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 90 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளார் தனுஷ் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் என்னை செருப்பால் அடித்துவிட்டார்!.. கண்கலங்கிய கண்ணதாசன்!..

Published by
Rajkumar

Recent Posts