நானே அதை விட்டுட்டேன் புரோ!.. தனுஷின் அறிவுரையில் ஆடிப்போய் ஆட்டத்தை ஆரம்பிக்கும் பரத்...

by Rohini |   ( Updated:2023-07-27 02:48:21  )
bharath
X

bharath

தமிழ் சினிமாவில் லட்சிய நடிகர் என்று பரத்தை கூறலாம். சினிமாவில் சாதிக்க வேண்டும் என எத்தனையோ நடிகர்கள் இன்னும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகர் பரத். தனது 50 வது படத்தை நெருங்கும் தனுஷ் இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். நடிப்பில் அனைவரையும் மிஞ்சும் அளவுக்கு ஒரு நல்ல நடிகனாக இருந்தாலும் ஏனோ மக்கள் அவருக்கு ஒரு சரியான அந்தஸ்தை இன்னும் கொடுக்கவில்லை.

bharath1

bharath1

2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் பரத். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனை அடுத்து செல்லமே என்ற திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். முதன்முதலாக அவரை ஹீரோ என்ற அந்தஸ்தை உருவாக்கிய படம் காதல். அந்த திரைப்படம் அவருக்கு அப்படிப்பட்ட ஒரு புகழை பெற்று தரும் என அவரே எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

இதையும் படிங்க : சிவாஜி – பத்மினி இடையே இருந்த காதல்!.. கல்யாணத்திற்கு தடையாக இருந்த அந்த காரணம்!..

தொடர்ந்து பட்டியல், எம்டன் மகன், கண்டேன் காதலை, காளிதாஸ், பழனி போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தார் பரத். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் பரத் நடித்திருக்கிறார்.

bharath2

bharath2

இப்போது தனது 50 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பரத். அதற்காக பல பிரமோஷன்களில் கலந்துகொண்டு வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் அவருடைய சகோதரி பரத்திடம் ஒரு கேள்வி கேட்டார். அதாவது "ஒரு நாளாவது செல்போன் இல்லாமலும் ஷாப்பிங் போகாமலும் உன்னால் இருக்க முடியுமா?" என கேட்டார்.

பரத் எப்பொழுதுமே தான் அணியும் உடை ஆகட்டும். மற்ற ஆடம்பர பொருள்கள் ஆகட்டும். அதில் தான் மட்டும் தனியாக தெரிய வேண்டும் என விரும்புவாராம் .அதனாலேயே மார்க்கெட்டில் எது புதியதாக வருகிறதோ அதை உடனே வாங்க வேண்டும் என எண்ணி ஷாப்பிங் செய்து விடுவாராம். அதன் காரணமாகவே தினந்தோறும் அவருடைய வீட்டிற்கு பல பொருள்கள் ஆன்லைனில் வந்து இறங்குமாம் .இதை குறிப்பிட்டே அவருடைய சகோதரி அந்தக் கேள்வியை கேட்டிருந்தார்.

bharath3

bharath3

ஆனால் பரத் ஷாப்பிங் செய்யாமல் வேண்டுமென்றால் இருந்து விடுவேன்.ஆனால் மொபைல் பயன்படுத்தாமல் இருக்க முடியாது எனக் கூறினார். மனிதனின் ஆறாவது விரலாக செல்போன் மாறிவிட்டதாகவும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கிறோமோ இல்லையோ செல்போனை தான் பார்க்கிறோம். அதை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது என்றும் கூறினார்.

ஆனால் ஒரு முறை தனுஷிடம் பேசியபோது அவர் எனக்கு ஒரு அறிவுரை வழங்கினார்.தனுஷ் செல்போன் பயன்படுத்த மாட்டாராம். பயன்படுத்தாமல் இருப்பதற்கான முயற்சியில் இருக்கிறாராம்.அவரை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அவருடைய நண்பர் ஒருவர் இருக்கிறாராம். அவரிடம் தான் தனுஷை பற்றி அணுக வேண்டுமாம்.

இதையும் படிங்க : மானங்கெட்ட பரம்பரை! குணசேகரனுக்கு ஆப்பு வைத்த ஜீவனாந்தம் – ‘எதிர்நீச்சல்’ சீரியலில் பகடைக்காயாக மாறியது யார்?

செல்போனை பயன்படுத்துவதால் மற்ற செயல்களில் நமக்கு இருக்கும் ஆர்வம் குறைந்து விடுவதால் செல்போன் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதுதான் நல்லது என எனக்கு அறிவுரை வழங்கினார் என பரத் கூறினார். நானும் அந்த முயற்சியில் தான் இருக்கிறேன் எனவும் பரத் கூறினார். இருந்தாலும் வர வர நடிகர் தனுஷ் கிட்டத்தட்ட ஒரு சாமியார் போலவே மாறிவருகிறார்.

Next Story