ரஜினிக்கு சொல்லப்பட்ட கதையா? அஜித் - தனுஷ் காம்போவின் பின்னணி

by Rohini |
rajinidhanush
X

rajinidhanush

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் இப்போது அடுத்த அடுத்த படங்களில் முத்திரை பதித்து வருகிறார். ப பாண்டி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான தனுஷ் அடுத்ததாக ராயன் திரைப்படத்தை இயக்கினார். ஒரு பக்கா கமர்சியல் கதையாக ராயன் திரைப்படம் ரசிகர்களிடையே வெற்றி பெற்றது.

அதனை அடுத்து இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கினார் தனுஷ். இதில் இட்லி கடை திரைப்படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த படத்தில் அவர் ஹீரோவாக நடித்தும் வருகிறார். அவருக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார். ஹீரோவாக மக்கள் மத்தியில் ஒரு நிலையான அந்தஸ்தை பெற்ற தனுஷ் இயக்குனராகவும் கால் பதிக்க வேண்டும் என்ற ஒரு முயற்சியோடு படங்களை இயக்கியும் வருகிறார்.

இந்த நிலையில் தனுஷ் அடுத்ததாக அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகிக் கொண்டு வருகின்றது. ஆனால் அது உண்மையா பொய்யா என்பதே பலருக்கும் கேள்வியாக இருக்கிறது. இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும் பொழுது இந்த செய்தி உண்மைதான். அஜித்திடம் தனுஷ் கதை சொன்னது உண்மை. அவர் கார் ரேஸ் எல்லாம் முடித்துவிட்டு முழு கதையையும் கேட்பதாக அஜித் கூறியிருக்கிறாராம்.

இந்த நிலையில் இது ரஜினிக்கு சொல்லப்பட்ட கதையாக கூட இருக்கலாம் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார். ஏனெனில் ப பாண்டி படத்திற்கு முன் ரஜினிக்கு ஒரு கதையை சொல்லி இருக்கிறார் தனுஷ். ஆனால் அதிலும் ரஜினிக்கு உண்டான மாஸ் கமர்சியல் எதுவும் இல்லாததால் அந்தப் படத்தில் ரஜினியால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதுவும் தனுஷிடம் இதில் கமர்சியலே இல்லை. அதனால் என்னால் நடிக்க முடியாது என்றும் சொல்லிவிட்டாராம்.

இந்த ஒரு வார்த்தை தனுஷ் வெறியோடு எழுதிய கதை தான் இப்போது அஜித்திற்கு சொல்லப்பட்ட கதை என வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கிறார். அதில் சில பல மாற்றங்களை செய்து அஜித்துக்காக உருவாக்கி இருக்கிறாராம் தனுஷ். இப்படி குட் பேட் அக்லி படத்தை ஒரு தீவிர வெறியனாக ஆதிக் கொண்டு வந்திருக்கிறாரோ அதைப்போல அஜித் தனுஷ் இணையும் படமும் ஒரு பக்கா கமர்ஷியல் ஆக்சன் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுவும் ஒரு முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் உச்சத்தை இருக்கும் அஜித் என இரண்டு பெரிய ஆளுமைகள் இணையும் போது அது ஒரு பெரிய படமாக இருக்கும் என்றும் வலைபேச்சு அந்தனன் கூறினார்.

Next Story