சிம்புவை தொடர்ந்து கவுதம் மேனனுக்கு எமனாக வந்த தனுஷ்!.. ஒருத்தர் விடாம அடிச்சா எப்படி?..

by சிவா |
simbu danush
X

Dhruva natchathiram: முன்பெல்லாம் சினிமாவை சரியாக திட்டமிட்டு எடுத்தார்கள். இதுதான் பட்ஜெட், இவ்வளவு நாள்தான் படப்பிடிப்பு என்பதில் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தெளிவாக இருந்தார்கள். வேலையில் ஒரு திட்டமிடல் இருந்தது. எனவே, திரைப்படங்கள் எந்த பிரச்சனையும் இன்றி சொன்ன தேதியில் ரிலீஸ் செய்யப்பட்டது.

ஆனால், கடந்த 20 வருடங்களாக திரைத்துரை ஒரு முக்கிய பிரச்சனையை சந்தித்து வருகிறது. சரியான திட்டமிடல் இல்லாமல் பல இயக்குனர்கள் படங்களை எடுத்து தயாரிப்பாளர்களுக்கு சிக்கலை கொடுத்து வருகிறார்கள். இதனால் பல திரைப்படங்கள் வெளியாகாமல் கிடக்கிறது. சில சமயம் இயக்குனர்களே படங்களை தயாரித்து பல பிரச்சனைகளிலும் சிக்கி கொள்கிறார்கள்.

இதையும் படிங்க: கை மாறிய அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் படம்!. என்னப்பா ஒரே டிவிஸ்ட்டா இருக்கே!…

கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிக்கும் பருத்திவீரன் கூட இதில் ஒன்றுதான். தயாரிப்பாளர் கையை விரிக்க, அமீர் தனது சொந்த பணத்தை போட்டு மீதி படத்தை எடுத்தார். ஆனால், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அவருக்கு அந்த பணம் கொடுக்கப்படவில்லை. ஒருபக்கம் கவுதம் மேனன் கதையும் இதுதான்.

கடன் வாங்கி படம் எடுப்பார். ஆனால், அதை கொடுக்க முடியாமல் போகும். ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போதே அந்த படத்தின் மீது கடன் வாங்கி வேறொரு படம் எடுப்பார். கடைசியில் இரண்டு படமும் வெளிவராமல் போகும். விக்ரம் நடிப்பில் அவர் தயாரித்து இயக்கிய துருவ நட்சத்திரம் படத்திலும் இதுதான் நடந்தது.

இதையும் படிங்க: தலைவர் 171 படத்தில் அந்த நடிகர்!.. ஒருவழியா நடந்திடுச்சிப்பா!.. ஆசையை நிறைவேற்றிய லோகேஷ்..

90 சதவீதம் படம் முடிந்த நிலையில் கையில் பணமில்லை. பல கோடி கடனுக்கும் ஆளானார். எனவே, தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அதில் வரும் பணத்தை வைத்து அந்த படத்தை எடுத்து முடித்தார். இப்போது படம் ரெடியாகி கடந்த 24ம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், கடன் கொடுத்தவர்கள் வந்து கட்டையை போட அவரால் படத்தை வெளியிட முடியவில்லை.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனர் மதனுடன் இணைந்துதான் கவுதம் மேனன் இந்த படத்தை தயாரித்திருந்தார். மதன் ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் சிம்புவுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக சொல்லப்பட்டு சிம்பு முதலில் கட்டையை போட்டார். அதேபோல், கொடி படத்தில் நடித்தபோது தனுஷுக்கு சம்பள பாக்கி என்பதால் அவரும் கட்டையை போட்டுள்ளார். ஒருபக்கம், கவுதம் மேனனின் கடன்கள் என நாலா பக்கமும் பிரச்சனை வந்ததால்தான் துருவ நட்சத்திரம் வெளியாகவில்லை என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: கிரேட் எஸ்கேப்!.. அஜர்பைஜானில் விடாமுயற்சி டீம் சந்தித்த பிரச்சனை.. அப்ப இதுதான் காரணமா

Next Story