Connect with us
banner

மீண்டும் துளிர்விடுமா காதல்.? ஒரே வீட்டில் தனுஷ் – ஐஸ்வர்யா.! வெளியான ரகசிய தகவல்…

Cinema News

மீண்டும் துளிர்விடுமா காதல்.? ஒரே வீட்டில் தனுஷ் – ஐஸ்வர்யா.! வெளியான ரகசிய தகவல்…

சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவை ஷாக் ஆக்கிய செய்தி என்றால் அது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் பிரிந்த செய்திதான். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சுமார் 18 வருட திருமண வாழ்வை முறித்து கொள்வதாக சில மாதங்களுக்கு முன்னர் தனித்தனியே அறிவித்து விட்டனர். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்குமோ? சூப்பர் ஸ்டார் ரஜினியின் மன நிலைமை எப்படி இருக்குமோ? என பலரும் வருத்தப்பட்டனர்.

இப்படி ஓர் சம்பவம் நடந்த பிறகு, இருவரும் அவரவர் துறைகளில் தங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டனர். தற்போது கிடைத்த தகவலின் படி இருவரும் கணவன்-மனைவியாக இருந்தபோது வசித்துவந்த வீட்டிற்கு அடிக்கடி வருகின்றனராம்.

இதையும் படியுங்களேன்  – அடுத்த கே.ஜி.எப்-க்கு உதவி செய்த தனுஷ்.! மிரட்டும் வீடியோ இப்போ ரிலீஸ்..

மேலும், அந்த வீட்டில் மாட்டப்பட்டுள்ள பலகையில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இரு பெயர்களும் இடம் பெற்றுள்ளதாம். அது தற்போது வரை நீக்கப்பட வில்லையாம். மேலும், இருவரும் தனித்தனியே அந்த வீட்டிற்கு வந்து சொல்கின்றனராம்.

இதனை கேட்ட  சினிமா வாசிகள், மீண்டும் அவர்களுக்குள் பழைய காதல் துளிர்விட்டு மீண்டும் இணைந்தால் நல்லதுதான் என்று கூறிவருகின்றனர். விரைவில் நல்லது நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top