Connect with us
banner

தனுஷ் படத்தில் இசைஞானி இளையராஜா.! அப்போ அனிருத்திற்கு என்ன வேலை.?!

Cinema News

தனுஷ் படத்தில் இசைஞானி இளையராஜா.! அப்போ அனிருத்திற்கு என்ன வேலை.?!

தமிழ் சினிமாவில் தற்போது பலரும் கம்பேக் கொடுத்து வருகின்றனர். தனுஷின் சக போட்டியாளராக சினிமாவில் கருதப்படும் சிம்பு அன்மையில் மாநாடு திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய கம்பேக் கொடுத்து மீண்டும் தான் களத்தில் இருக்கிறேன் என்பதை நிரூபித்து விட்டார். ஆனால் தனுஷின் சமீபத்திய மூன்று திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் இருக்கிறது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது கர்ணன் மட்டுமே. அதனால் மீண்டும் ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகிறார்.

தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அப்டேட் என்ற பெயரில் அப்டேட்க்கே அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நாளை முதல் இந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள் போஸ்டருடன் ரிலீசாகும் என்று அப்டேட் க்கு ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் ஓர் அறையில் தனுஷ் உட்கார்ந்திருப்பது போலவும், அவருக்கு முன்னால் இளையராஜா போஸ்டர் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்தது போலவும் காட்டப்பட்டுள்ளது. தனுஷின் முகம் காட்டவில்லை. இதை வைத்து பார்க்கும் பொழுது இசைஞானி இளையராஜா அவர்களின் தீவிர ரசிகராக தனுஷ் வருகிறார் என்பது தெரிகிறது.

இதையும் படியுங்களேன் – ஒரே ஒரு படம் தான்.. தளபதி66 தயாரிப்பாளரை மிரள வைத்த சூர்யா.! ஃபாலோ செய்யும் தில் ராஜு.!

இதனை வைத்து பார்க்கையில் தற்போது அனிருத்தின் சமீபத்திய திரைப்படங்கள் காது கிழியும் அளவிற்கு குத்து பாடல்கள், ரசிகர்களை எழுந்து நின்று ஆட வைக்கும் அளவிற்கு பின்னணி இசையையும் கொடுத்து வருகிறார். ஆனால், இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் ரசிகராக தனுஷ் இருப்பதால், மென்மையான இசையை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி மென்மையான இசையை கொடுப்பது தான் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் அனிருத் வேலையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top