ஒருவழியா தனுஷ் - அனிருத் பஞ்சாயத்து தீர்ந்து போயிடுச்சி... மேடையில் நடந்த சூப்பர் சம்பவம்.!

by Manikandan |   ( Updated:2022-07-31 05:11:38  )
ஒருவழியா தனுஷ் - அனிருத் பஞ்சாயத்து தீர்ந்து போயிடுச்சி... மேடையில் நடந்த சூப்பர் சம்பவம்.!
X

தனுஷ் நடித்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வெளியான திரைப்படம் 3. இந்த திரைப்படத்தில் தான் இசையமைப்பாளர் அனிருத் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து தனுஷ் படங்களில் இவர் இசையமைத்து வந்தார். மேலும், தனுஷ் தயாரிக்கும் படங்களிலும் இவர் இசையமைத்து வந்தார்.

இடையில் இவர் சிவகார்த்திகேயன் படங்களுக்கு அதிகமாக இசையமைக்க தொடங்கிய பின்னரும், மற்ற பெரிய பெரிய நடிகர்களுக்கும் இசையமைக்க தொடங்கிய பின்னரும் தனுஷை விட்டு விலகி விட்டார் என்றே கூறபட்டது.

அதேகேற்றார் போல தங்கமகன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷின் எந்த படத்திற்கும் அனிருத் திசையமைக்கவில்லை. மேலும், எந்த விழா மேடையிலும் அனிருத் மற்றும் தனுஷ் ஆகியோர் ஒன்றாக இணைந்து இருக்கவில்லை. ஆதலால் இருவருக்குள்ளும் மன கசப்பு இருக்கிறது என்று சினிமா வட்டத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் அனிருத் இசையமைக்க தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்களேன் - நம்ம லெஜண்ட் அண்ணாச்சியின் அசத்தல் பேச்சு.. ஆடிப்போன தமிழ் சினிமா…

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் ஒரே மேடையில் தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் மேடையேறி வந்து திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து தேன்மொழி எனும் பாடலையும் ஒன்றாக பாடினர். இதன் மூலம் தற்போது அனிருத் மற்றும் தனுஷ் இடையே உள்ள பஞ்சாயத்து கொஞ்சம் தீர்ந்துவிட்டது என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தனுஷ் படங்களில் இனி அனிருத் இசையை காணலாம் என்றும் கூறி வருகின்றனர்.

Next Story