Categories: latest news

மாளவிகாவை நெஞ்சில் தாங்கி காதலர் தின வாழ்த்து கூறிய தனுஷ்.!

தனுஷ் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு அடுத்து ரெடியாக உள்ள திரைப்படம் மாறன். தியேட்டருக்கு வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில் இத்திரைப்படம் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

மேலும், இந்த திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் உடன் தனுஷுக்கு உரசல், தனுசுக்கு படத்தின் சில காட்சிகள் பிடிக்கவில்லை, தனுஷே இந்த படத்தில் சில காட்சிகளை இயக்கினார். தனுஷ் தான் இந்த படத்தை OTTயில் வெளியிட கூறினார் என பல வதந்திகள் அடுத்ததடுத்து வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

இதையும் படியுங்களேன் – தளபதி விஜய் செய்யாததை தல அஜித் அடிக்கடி செய்கிறார்.! இத யாருமே எதிர்பார்க்கல.!

எது எப்படியோ படம் திட்டமிட்டபடி விரைவில் ரிலீஸ் ஆனால் போதும் என்கிற மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர். இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோஹனன் நடித்து உள்ளார்.

இன்று காதலர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து மாறன் படத்தில் இருந்து புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் தனுஷ், மாளவிகாவை நெஞ்சில் தாங்கி நிற்பது போல உள்ளது. இது ஒரு காதல் பாடல் அல்லது காதல் காட்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Published by
Manikandan