நீ இப்படி இருந்தால் தான் ரெம்ப அழகா இருக்க… ஓப்பனாக கமெண்ட் அடித்த தனுஷ்.! வெளியான சீக்ரெட்…

Published on: August 27, 2022
---Advertisement---

ஒரு ஹீரோ என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், இந்த உயரம், இந்த கலர்  , இந்த உடற்கட்டு இருக்க வேண்டும் ஒரு காலத்தில் இருந்தது. அது அத்தனையும் முறியடித்தவர சூப்பர் ஸ்டார் ரஜினி என்றே கூறலாம். அதன் பிறகு விஜயகாந்த் என பலர் அதனை உடைத்து எறிந்தனர்.

தற்காலத்தில் அதற்கு சிறந்த உதாரணம் தனுஷ் தான். இவரை ஆரம்ப காலகட்டத்தில் உருவ கேலி செய்யாதோர் மிக குறைவே. அதனை ஈடுகட்ட ஒவ்வொரு படத்திலும், தனது நடிப்பை மெருகேற்றி நடித்து வருகிறார் தனுஷ்.

இதையும் படியுங்களேன் –  கவர்ச்சி ஓகே.. அந்தமாதிரி நடித்தாலும் தப்பில்லை… ஓஹோ இதனால் தான் இவங்க குட்டி நயன்தராவா.!

அண்மையில் இவர் நடித்த திருச்சிற்றம்பலம் படம் ரிலீசாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இதில் நித்யா மேனன் ஹீரோயினாக நடித்து உள்ளார். நித்யா மேனன் அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டுமிக வெளிப்படையாக பல்வேறு விஷயங்களை பேசினார்.

இதையும் படியுங்களேன் –  அப்பாடா அவங்களுக்கு கோப்ரா பிடிக்கலையாம்.. அப்போ விக்ரம் படம் பெரிய ஹிட்… இது சினிமா சீக்ரெட்..

அதில், தனுஷ் சாருக்கு உருவ கேலி வந்திருந்தது. அதே போல உங்களுக்கும் வந்திருக்கும், ஹீரோயின் என்றால் அப்படி இருக்கனும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் நீங்கள் அதனை உடைத்துள்ளீர்கள் இது பற்றி கூறுங்கள் என கூறுகையில்,

நித்யா மேனன், ‘ இது பற்றி தனுஷ் சார் என்னிடம் கூறும் போது, வெளித்தோற்றம் என்பது ஒன்றுமே இல்லை. நாம் நம் திறமை மூலம் என்ன செய்கிறோமோ அதுதான் நிஜம். அப்படி தான் நீயும் இருக்க வேண்டும். உண்மையில் நீ இப்படியே குண்டாக இரு அது தான் உனக்கு அழகு.’ என தனுஷ் சார் கூறினார்.’ என நித்யா மேனன் அந்த பேட்டியில் கூறினார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.