சிவகார்த்திகேயன், சூர்யா போன்றோர் தங்களது திரைப்படங்களை தங்களது பட நிறுவனங்கள் மூலம் தற்போது தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். இதேபோல முன்பு நடிகர் தனுஷும் தனது நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வெளியிட்டும் வந்தார்.
வேலையில்லா பட்டதாரி, காக்கிச்சட்டை, நானும் ரவுடிதான், எதிர்நீச்சல், காக்கா முட்டை, வட சென்னை என பல்வேறு திரைப்படங்களை தனது பட நிறுவனம் வுண்டர்பார் பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் தனுஷ்.
அதன் பிறகு, அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தனது நிறுவனம் மூலம் படம் தயாரிப்பதை தனுஷ் நிறுத்திவிட்டார். தற்போது அந்த பட நிறுவனம் மூலம் எந்த படமும் தயாராகவில்லை.
மேலும், இந்த பட தயாரிப்பை நிறுத்தி வைத்ததற்கு ரஜினியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது கபாலி படத்தை எடுத்த பிறகு, மீண்டும் இயக்குனர் பா.ரஞ்சித்திடம் கதை கேட்டு ரஜினி ஓகே செய்து வைத்துள்ளார். இந்த படத்தை தயாரிக்க தனுஷ் முன்வந்துள்ளார்.
தனுசுக்கு அந்த சமயம் 40 கோடி ரூபாய் கடன் இருந்ததாம். ரஜினி படம் மூலம் அதனை ஈடு செய்து விடலாம் என்று தனுஷ் அந்த படத்தை தயாரித்தாராம். ஆனால், ஏற்கனவே கபாலி படத்தின் மூலம் பட்ட அனுபவத்தை மறந்து மீண்டும் இயக்குனர் ரஞ்சித்துக்கு ரஜினிகாந்த் வாய்ப்பு அளித்து இருந்தாராம்.
காலா படத்தை பார்த்த தனுஷ், அதனை வேறு முறையில் வெளியீடு செய்தாராம். அதாவது நஷ்டம் வந்தால் தான் ஏற்று கொள்வது போல. ஏன் என்றால் , ரஜினிகாந்த் பெயர்க்கு களங்கம் வந்துவிட கூடாது என்பதாம்.
மேலும் , தனக்கு லாபம் கிடைக்கும் அதன் மூலம் கடனை அடைத்து விடலாம் என்று இருந்த தனுசுக்கு அந்த காலா படத்தின் மூலம் 22 கோடி ரூபாய் நஷ்டம் ஆனதுதான் மிச்சமாம்.
இதையும் படியுங்களேன் – பெரியப்பாவை கொடுத்ததற்கு தேங்க்ஸ்.! இது கொஞ்சம் புதுசா இருக்கு ஷங்கர் சார்.!
இதன் காரணமாக தனுஷுக்கு அந்த சமயம் 62 கோடி ரூபாய் அளவுக்கு கடன் அதிகரித்தாதாம். தன் காரணமாகவே தொடர்ந்து அடுத்தடுத்து தனது நிறுவனம் மூலம் படம் எடுப்பதை குறைத்து கொண்டு தற்போது முற்றிலுமாக நிறுத்திவிட்டார் தனுஷ்.
தற்போது தனுஷ் தனது ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து தனது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த தகவலை அண்மையில் ‘வலைபேச்சு’ அந்தனன் ஒரு வீடியோ மூலம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…