மாமனாரும் மருமகனும் அடிக்கடி போனில் நலம் விசாரிப்பு! கூடிய சீக்கிரம் படத்திலயும் பாக்கப் போறீங்க

Published on: November 15, 2024
dhanush
---Advertisement---

கூடிய சீக்கிரமே ரஜினியை வைத்து தனுஷ் ஒரு படம் இயக்கப் போகிறார் என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார் காமெடி நடிகரான பாவா லட்சுமணன். தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய உச்சமாக திகழப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது அவர் லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க இருக்கிறார்.

கூலி : இந்த வயதிலேயும் தன் கெரியருக்கு எந்தவித பாதிப்பும் வராத அளவு நல்ல முறையில் கொண்டு செல்கிறார் ரஜினி. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து கூலி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில்தான் ரஜினியை வைத்து தனுஷ் படம் இயக்குவார் என்று பாவா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: Kanguva: ஞானவேல் ராஜா எப்படி ஏமாந்தார்? சிம்பு, ஷங்கர் படங்கள் இனி அவ்ளோதானா?

ஏற்கனவே ரஜினியின் மகளுக்கும் தனுஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில காலம் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு கூடிய சீக்கிரம் இருவரும் மீண்டும் ஒன்று சேர இருக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. ஆனால் அவர்களுடைய இரண்டு மகன்களும் அம்மாமீதும் அப்பா மீதும் அளவுகடந்த அன்பை வைத்திருக்கின்றனர். அவர்களுக்காகவாவது இருவரும் சேர வேண்டும் என அனைவரும் வேண்டிக் கொண்டனர்.

அடிக்கடி நலம் விசாரிப்பு: இந்த நிலையில்தான் ரஜினியிடம் அடிக்கடி தனுஷ் போனில் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். இப்போது வரை அது நடக்கிறது. கூடிய சீக்கிரம் ரஜினியை வைத்து தனுஷ் ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் பாவா லட்சுமணன் கூறியிருக்கிறார். ஏற்கனவே தனுஷு பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

rajini
rajini

இதையும் படிங்க: இவன வச்சு எப்படி படம் எடுக்கிறது? சரி வராது.. சூர்யாவுக்காக பேச போய் திரும்பி வந்த சிவக்குமார்

அதன் வரிசையில் இப்போது ரஜினியும் படமும் இணையுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது தனுஷ் இட்லி கடை படத்திலும் தெலுங்கில் குபேரா படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து அவருடைய லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் முடித்து ஒரு வேளை பாவா லட்சுமணன் கூறிய படி நடந்தால் அது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.