More
Categories: Cinema News latest news

எவ்ளோ பெரிய ஜீனியஸ் டைரக்டரா இருந்தாலும்!.. இது என் படம்!.. சொந்த அண்ணனிடமே ராங்கு காட்டிய தனுஷ்!..

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தில் செல்வராகவன் நடித்த நிலையில், பழைய பகை எல்லாம் ஒட்டுமொத்தமாக அண்ணன் செல்வராகவன் மீது தனுஷ் இறக்கிட்டாரு என எஸ்.ஜே. சூர்யா சமீபத்தில் ராயன் படம் தொடர்பாக அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் 50வது படமாக ராயன் உருவாகி உள்ளது. இந்த படத்தில் தனுஷ் 60 சதவீதம் தான் வருவார் என்றும் 50 சதவீத ஸ்பேஸ் எனக்கு கொடுத்துள்ளார் என எஸ்.ஜே. சூர்யா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கமல், மோகன்லால், மம்மூட்டி, பகத் ஃபாசில்!.. ஒரே படத்தில் இத்தனை பேரா?.. வெளியானது செம டிரைலர்!..

தனுஷ், செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி மற்றும் துஷாரா விஜயன் என நடிகர்கள் பட்டியலை பார்த்தாலே இந்த படம் ஹிட் தான் என்பதை சொல்லி விடலாம்.

அந்தளவுக்கு மிரட்டலான காஸ்டிங்கை கொண்டு வந்து தனது 50வது படத்தை தரமாக கொடுக்க வேண்டும் என தனுஷே இறங்கி இயக்கியுள்ளார். தனுஷ் இயக்கத்தில் நடிக்கவே பயமாக இருந்தது. ஏற்கனவே ஒரு படத்தில் நடித்து அந்த படம் பாதியிலேயே டிராப் ஆகிவிட்டது. இந்த படமும் அதுபோல ஆகிவிடக் கூடாது என கடைசி வரை வேண்டிக் கொண்டே இருந்தேன். வரும் வாரம் படம் திரைக்கு வருகிறது.

இதையும் படிங்க: பாலுமகேந்திரா எதைச் செய்தாலும் என் வளர்ச்சிக்காகத் தான் செய்வார்… நடிகை ஓபன் டாக்

இயக்குனராக தனுஷ் இந்த படத்தில் மிரட்டி எடுத்துள்ளார். செல்வராகவன் சார் ஒரு சீன்ல அவர் ஸ்டைலில் ஒன்றை பண்ணி விட்டார். ஆனால், தனுஷ் விடவில்லை, ரீடேக் கேட்டு, தான் சொல்வது போல நடிக்கச் சொன்னார்.

தம்பி தானே என்று சண்டை போடாமல், அவர் தான் இந்த படத்தின் இயக்குனர் என்பதை மதித்து அவ்ளோ பெரிய ஜீனியஸ் டைரக்டர் செல்வராகவன் மறுபடியும் இயக்குனர் என்ன கேட்கிறாரோ அதற்கு தகுந்தது போல நடித்துக் கொடுத்தார். அண்ணன் தானே என்று தனுஷும் சும்மா விடவில்லை. எத்தனை படத்தில் தனுஷை செல்வா சார் வேலையை வாங்கியிருப்பார் என எஸ்.ஜே. சூர்யா அந்த காட்சியை விவரித்த விதமே சிறப்பாக இருந்தது.

இதையும் படிங்க: இந்திய சினிமாவிலேயே இப்படி ஒரு fight யாரும் பார்த்திருக்க மாட்டாங்க… கங்குவா படத்தில் ஒரு தரமான சம்பவம் இருக்கு…

Published by
Saranya M

Recent Posts