Connect with us
dhanush

Cinema News

யாரு சொன்னா? அடுத்த தல, தளபதி நாங்கதான்.. கட்டியணைத்து போஸ் கொடுக்கும் சிம்பு – தனுஷ்

தமிழ் சினிமாவில் சிவாஜி – எம்ஜிஆர், ரஜினி – கமல், அஜித் – விஜய்  இவர்கள் வரிசையில் அடுத்த இரு நடிகர்கள் யாராக இருக்கும் கூடும் என்ற போட்டி சமீப காலமாக இருந்து வருகிறது. விஜய் ஒரு பக்கம் அரசியலில் தீவிரமாக இறங்கி விட்டார் .அஜித் அவருடைய பேஷனான கார் பந்தயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். இப்படி இருக்கும் பொழுது விஜய் அஜித்துக்கு பிறகு எந்த நடிகர்கள் அந்த அந்தஸ்தில் வருவார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் இருந்து வருகிறது.

சிலபேர் சிவகார்த்திகேயனையும் சில பேர் சூர்யாவையும் கூறி வருகிறார்கள். ஆனால் யாரும் அந்த இடத்திற்கு வர முடியாது. நாங்கள்தான் என கெத்தாக போஸ் கொடுத்து அதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் சிம்புவும் தனுஷும். சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணம் சென்னையில் நடைபெற்றது. ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்ட அந்த திருமண விழாவில் தனுஷும் சிம்புவும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: எஸ்.ஜே.சூர்யாவுக்குப் பிடிச்ச டயலாக் எதுன்னு தெரியுமா? கேட்டுறாதீங்க… விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

simbu

simbu

நேற்று நடந்த அந்த விழா பார்ட்டியில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பை பரிமாறி இருக்கின்றனர். அதில் இருவருமே சும்மா மாஸாக உடைஅணிந்து பார்ப்பதற்கு ஸ்டைலான லுக்கில் இருக்கிறார்கள் .தோள் மேல் கைப்போட்டு போஸ் கொடுத்தும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து போஸ் கொடுத்தும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கின்றனர் .

அதை பார்க்கும் பொழுது மந்தையில் இரு ஆடுகள் சந்தித்துக்கொண்டன என்ற அந்த டயலாக் தான் ஞாபகத்திற்கு வருகின்றது. ஒரு காலத்தில் இரு தரப்பு ரசிகர்களும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். என் தலைவன் தான் பெருசு. உன் தலைவன் தான் பெருசு என சிம்பு ரசிகர்களும் தனுஷ் ரசிகர்களும் இணையதளத்தில் அடித்துக் கொண்டனர்.

simbu1

simbu1

தனுசுக்கு முன்பாகவே சிம்பு குழந்தை நட்சத்திரமாக இந்த தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருந்தவர். ஆனால் சினிமாவிற்குள் வந்த குறுகிய காலத்தில் தனுஷ் மிகப்பெரிய நடிகராக இது சிம்புவுக்கு ஒரு பின் விளைவை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இதைப்பற்றி சிம்புவும் பல மேடைகளில் தான் யார் தன்னுடைய ரசிகர்கள் இருக்கும் வரை என்னை யாரும் அசைச்சிட முடியாது என்றெல்லாம் பேசி வந்தார்.

இதையும் படிங்க: எஸ்.ஜே.சூர்யாவுக்குப் பிடிச்ச டயலாக் எதுன்னு தெரியுமா? கேட்டுறாதீங்க… விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

simbu2

simbu2

இது தனுஷுக்கு எதிராகத்தான் அவர் பேசுகிறார் என ரசிகர்கள் கூறி வந்தனர். இருவருக்கும் உண்மையிலேயே சண்டை நடந்து வருகிறது என்ற பேச்சும் அடிபட்டது. ஆனால் ஆகாஷ் பாஸ்கரன் திருமண பார்ட்டியில் அவர்கள் இருவரும் போஸ் கொடுத்த அந்த புகைப்படம் இவர்களை யாரும் பிரிக்க முடியாது  என்ற வகையில் தெளிவு படுத்தியிருக்கிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top