தனுஷ் பாணியில் ஹாலிவுட் பிரபலத்தை பின்தொடர்ந்த பெரிய இடத்து மாப்பிளை... கலாய்க்கும் ரசிகர்கள்...

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷனின் தங்கை மகன் வருண். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். கோமாளி, பாபி உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவர் தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜோஷ்வா படத்தில் நடிக்கிறார். படத்திற்கான பாதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், மீது உள்ள படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் அதிரடி சண்டைக்காட்சிகள் அதிகமாக இருப்பதால் நடிகர் வருண் பிரான்ஸ் நாட்டிற்கு கிளம்பி சென்றிருக்கிறாராம்.
இதையும் படியுங்களேன்-அடடே.. யோகிபாபு மகனா இது.? அப்பாவ போல அப்படியே இருக்கீங்களே… சீக்ரெட் புகைப்படம் இதோ…
அந்த நாட்டில் இருக்கும் பிரபலன் மாஸ்டர் ஆன யானிக் பென்னிடம் சண்டை காட்சிக்காக பயிற்சி எடுத்து வந்துள்ளாராம். யானிக் பென் வேறு யாரும் இல்லை தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி க்ரே மேன் ஹாலிவுட் படத்தில் பணியாற்றிய ஸ்டன்ட் இயக்குனர் தான்.
எனவே, படத்தில் நன்றாக தன்னுடைய முழு உழைப்பை போடும் வகையில், நடிகர் வருண் யானிக் பென்னிடம் சண்டை பயிற்சி எடுத்துள்ளாராம். இதைப்போல தான் தனுஷும் பயிற்சி எடுத்துவந்தார் என்பது குறிபிடத்தக்கது. ஆனால், இந்த படம் வெளியாகுமா..? இல்லையா என்பது யாருக்குமே தெரியவில்லை. எதனெனும் அப்டேட் வருகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.