அடுத்த ஏப்ரல் என்னோடது... வீடியோ வெளியிட்டு கோலிவுட்டை அதிர வைத்த தனுஷ்...

by Manikandan |
அடுத்த ஏப்ரல் என்னோடது... வீடியோ வெளியிட்டு கோலிவுட்டை அதிர வைத்த தனுஷ்...
X

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. அதன் காரணமாக தனது அடுத்த அடுத்த படங்களில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறார் தனுஷ். அடுத்ததாக அவர் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகிறது.

தனுஷ் ரசிகர்கள் இந்த திருச்சிற்றம்பலம் படத்தை விட, செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக உள்ள நானே ஒருவன் திரைப்படத்திற்கு தான் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். அதுதான் தனுஷின் கம்பேக் திரைப்படமாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அதேபோல தனுஷ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் தனுஷ் படம் என்றால் அது அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் உருவாக உள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் தான்.

இதையும் படியுங்களேன் - எல்லாத்தையும் கழட்டி போட்டு நிற்கும் ரவுடி ஹீரோ.! ரசிகர்களை ஷாக் ஆக்கிய அந்த புகைப்படம் இதோ...

இந்த திரைப்படத்தை பெரிய பட்ஜெட்டில் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டர் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் அட்வென்சர் பைக்கில் தனுஷ் செல்லும் ஒரு கார்ட்டூன் புகைப்பட தொகுப்பு போல ஹாலிவுட் தரத்தில் ஒரு வீடியோ ரிலீஸ் ஆகி உள்ளது. அதில் 2023 கோடை விடுமுறை என எழுதப்பட்டுள்ளது.

இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள், அடுத்த ஏப்ரல் தனுஷ் உடையது ஆகும். அவ்வளவு மிரட்டலாக படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ அமைந்துள்ளது என்று கொண்டாடி வருகின்றனர்.

Next Story