தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளின் வெளியான கேப்டன் வின்னர் திரைப்படம் முதல் நாளில் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது.
இதையும் படிங்க: ரஜினி விஷயத்துல அவர் பண்ணது வேறலெவல்!.. அப்பவே ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்த சிவகார்த்திகேயன்..
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போர் படத்தை இதுவரை எந்த ஒரு இயக்கங்களும் உருவாக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு படம் ஆரம்பித்ததில் தொடங்கி முடியும் வரை போர் காட்சிகளையும், தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தையும் காட்சிப்படுத்தி இயக்குனர் ரசிகர்களை கட்டிப்போட்டு உள்ளார். ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை தனுஷ் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் மாஸ் எலிவேஷனை கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கேப்டன் மில்லர் வெளியானது. உலக அளவில் ஒட்டுமொத்தமாக 1500 திரையரங்குகளில் வெளியான இந்த படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் சுமார் 8 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் உலக முழுவதும் இந்த படம் அதிகபட்சமாக 17 கோடி ரூபாய் வசூல் அள்ளி இருப்பதாகவும் நடிகர் தனுஷுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது என்றும் பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கை இல்லாத ஜாக்கெட்டு கண்ண கட்டுது!.. கட்டழகில் அசர வைக்கும் அதிதி ஷங்கர்…
முதல் நாளிலே படம் வெற்றி பெற்று விட்டதாக சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுசுக்கு மிகப்பெரிய மாலையை அணிவித்து கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்த பொங்கல் தனுஷின் கேப்டன் மில்லர் பொங்கல் தான் என அந்தப் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…
நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…
நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…
பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…
தமிழ் சினிமாவில் தற்போது விவேக் இல்லை. கவுண்டமணி நடிப்பதில்லை.. வடிவேலுக்கு ரிட்டயர்ட் ஆகும் வயதாகிவிட்டது. அதோடு, அவரின் காமெடியும் எடுபடவில்லை.…
Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் ரோகிணிக்கு எதிராக சரியான காயை…