ஆட்டம்னா இது ஆட்டம்!.. தனுஷோட சூப்பர் ஸ்டார் போட்ட ஆட்டத்தை பாருங்க!.. வைரலாகும் கோரானாரு பாட்டு!..
அண்ணன் செல்வராகவன், கீர்த்தி சுரேஷை வைத்து சாணிக் காயிதம் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தம்பி தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவர் 12ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், அந்த படத்தின் 3வது சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது.
நாளை சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு இதுவரை ஜி.வி. பிரகாஷ் இயக்கத்தில் உருவான 3 பாடல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: எதே 8822 வயசா!.. ஓஹோ.. பைத்தியமா இவன்.. பிரேமம் ஹீரோவை இப்படி பிணாத்த விட்டுட்டாரே ராம்!
கோரனாரு எனத் தொடங்கும் முரட்டுத்தனமான பாடலில் தனுஷ் உடன் இணைந்து கன்னட சூப்பர்ஸ்டார் நடிகரான சிவராஜ்குமாரும் பட்டையை கிளப்பி உள்ளார். இந்த படத்தில் அவர் தான் வில்லன் என தகவல்கள் வெளியான நிலையில், இப்படி தனுஷ் உடன் இணைந்து ஆட்டம் போடுறாரே அப்போ இவர் தனுஷ் டீமா? என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
போர் சூழலை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படம் ஜனவரி மாதம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என தெரிகிறது. தனுஷின் கேப்டன் மில்லர் படத்துடன் எந்த தைரியத்தில் சிவகார்த்திகேயன் அயலான் படத்தை வெளியிடுகிறார் என தெரியவில்லை என்றும் பிரின்ஸ் அடி வாங்கியது போல அடி வாங்கப் போகிறது என்றும் தனுஷ் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சம்பளம் மட்டும் போதும்! கதை தேவையில்ல – அடுத்த படத்திற்கும் ஆப்பு வைக்க தயாராகும் ஜெயம் ரவி
நாளை மாலை 6 மணிக்கு கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தனுஷ் பேச்சைக் கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.