பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை?… மேடையில் தனுஷை அசிங்கமாக பேசிய தயாரிப்பாளர்…
Dhanush: நடிகர் தனுஷ் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பெரிய அளவில் உயர்ந்து இருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கை மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. இதுகுறித்து பலரும் கருத்து கூறி இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்து இருப்பது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினிகாந்தின் மூத்தமகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா மற்றும் கஸ்தூரி ராஜாவின் மகனும் நடிகருமான தனுஷ் இருவருக்கும் இடையேயான விவகாரத்து தான் தற்போது சோஷியல் மீடியா ட்ரெண்ட்டிங் நிகழ்வாகி இருக்கிறது. பலரும் அவர்கள் விவகாரத்து விஷயம் குறித்து பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: அபார்ஷன் பண்ண சொன்ன கோபி… கடுப்பில் கத்திவிட்ட ராதிகா… தேவையா இதெல்லாம்?
இரண்டு வருடத்துக்கு முன்னரே பிரிவதாக இருவரும் அறிவித்து இருந்தனர். ஆனால் லீகலாக செல்லாமல் நின்றதால் ரஜினிகாந்த் மற்றும் மற்ற குடும்ப நண்பர்கள் இணைந்து தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முடிவு தோல்வியை தழுவியது. இதனாலே இருவரும் முறையாக நீதிமன்றம் சென்றுவிட்டனர்.
இதுமட்டுமல்லாமல் இருவரும் இந்த விவகாரத்து முடிந்த பின்னர் முறையாக இரண்டாம் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. இதில் ஐஸ்வர்யா உதவி இயக்குனர் ஒருவருடன் டேட்டிங்கில் இருக்கும் தகவலும் கசிந்து வருகிறது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன், நடிகர் தனுஷ் ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாகவே கேட்கிறேன்.
பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை வேண்டி கிடக்கு என பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார். தனுஷ் ஒரு மனிஷனா? ஐஸ்வர்யா எல்லாம் ஒரு பொம்பளையா என பலர் பேசுமாறு வாழக்கூடாது. உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு இருவரும் இணைந்து வாழுங்கள் என ஓபனாக உடைத்து பேசி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
இதையும் படிங்க: நான் டாப் ஸ்டார் இல்ல… பிரசாந்தே இப்படி இப்படி சொல்ற அளவுக்கு என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்…