5 கோடியை ஏமாத்துனா சும்மா விடுவாங்களா? வசமாக சிக்கிய தனுஷ்!
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகம் எடுக்கும் அதிரடியான முடிவுகளால் நடிகர்கள், நடிகைகள் கதிகலங்கி போய் நிற்கின்றனர். முன்பெல்லாம் அவர்கள் என்ன சொல்வது, நாம் என்ன கேட்பது என நடிகர்கள் இருந்து வந்தனர். ஆனால் இப்போது அவர்களிடமிருந்து யாரும் தப்ப முடியாது என்ற சூழ்நிலை எழுந்திருக்கின்றது.
ஏற்கெனவே சரியாக ஒத்துழைப்பு தராமை, கால்ஷீட் தருவதில் பிரச்சினை என ஒரு ஐந்து நடிகர்களுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டிருந்தது. அவர்களில் நடிகர் யோகிபாபு, அதர்வா, சிம்பு, விஷால்,எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் அடங்குவர்.
ஆனால் அதில் மூன்று நடிகர்கள் மட்டும் தளர்த்து விடப்பட்டிருக்கின்றனர். அதற்கு காரணம் இனிமேல் இந்த மாதிரி செய்கைகளில் ஈடுபட மாட்டோம் என்று அவர்கள் கூறியதனால் ரெட் கார்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த லிஸ்ட்டில் மற்றுமொரு நடிகர் இணைந்திருக்கிறாராம்.
அவர்தான் தனுஷ். இவருக்கும் தயாரிப்பாளர் முரளி ராமசாமிக்கும் இடையே நீண்டகால பிரச்சினை ஒன்று இருந்து வந்திருக்கின்றது. அதாவது முரளி ராமசாமி சன் பிக்சர்ஸுடன் இணைந்து தனுஷ் இயக்கத்தில் அவரே நடிப்பதாக ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கு அட்வான்ஸாக 5 கோடியையும் தனுஷ் பெற்றுக் கொண்டாராம்.
படப்பிடிப்பும் சில நாள்கள் நடக்க அதன் பிறகு படப்பிடிப்பு நடக்கவே இல்லையாம். மேலும் அவர் கொடுத்த அட்வான்ஸ் தொகையில் பாதியாவது தனுஷ் முரளி ராமசாமியிடம் கொடுத்திருக்கலாம், ஆனால் அதையும் கொடுக்க வில்லையாம். இதனால் பெரும் மனகஷ்டத்திற்கு ஆளானாராம் முரளி ராமசாமி.
இந்த விஷயம் பற்றியும் தயாரிப்பு கவுன்சிலிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறதாம். கூடிய சீக்கிரம் தனுஷிற்கும் ரெட் கார்டு வழங்கப்படலாம் என்றும் கூறிவருகின்றனர்.