Categories: latest news

NEEK: தனுஷ் போடும் பக்கா ஸ்கெட்ச்!.. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் அப்டேட்!

தனுஷ் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியாக இருப்பதாக தகவல்.

இயங்குனர் தனுஷ்: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் இயக்கத்திலும் மாஸ் காட்டி வருகின்றார். 2017 ஆம் ஆண்டு வெளியான பா பாண்டி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தார் நடிகர் தனுஷ். பின்னர் தன்னுடைய 50-வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் தமிழ் சினிமாவில் தன்னை இயக்குனராகவும் நிரூபித்து இருக்கின்றார் நடிகர் தனுஷ். கையில் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கும் நடிகர் தனுஷ் மற்ற இயக்குனர்களின் இயக்கத்திலும் நடித்து வருகின்றார்.

இதையும் படிங்க: K.Balachander: நடிகரின் நம்பிக்கையைப் பொய்யாக்கிய பாலசந்தர்… யார்…? என்ன படம்னு தெரியுமா?

புது படங்கள்: தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. அதைதொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார்.

இயக்கும் படங்கள்: இப்படி ஏராளமான திரைப்படங்களை தனது கையில் வைத்திருக்கும் நடிகர் தனுஷ், இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார். தன்னுடைய மூன்றாவது திரைப்படமான நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்து இருக்கின்றார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மேலும் படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார். இது நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு பக்கம் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்கள் மற்றொரு பக்கம் தன்னுடைய இயக்கம் என்று சினிமாவில் நிற்க நேரமில்லாமல் பிஸியாக இருந்து வருகின்றார் நடிகர் தனுஷ்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: தனுஷ் இயக்கி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்தை தனுஷே தயாரித்து இருக்கின்றார். இந்த படம் ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கின்றது. இப்படத்தின் மூலமாக தனது அக்கா மகனை ஹீரோவாக அறிமுகம் செய்திருக்கின்றார் நடிகர் தனுஷ். மேலும் ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கின்றார்.

இதையும் படிங்க: Sarathkumar: ஷூட்டிங்கில் கெட்டுப் போன சாப்பாட்டை கொடுத்த படக்குழு!… நாட்டாமை செய்த தரமான சம்பவம்!..

சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியிடுவதற்கு நடிகர் தனுஷ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இப்படம் அன்றைய தேதியில் வெளியானால் காதலர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

3 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

4 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

5 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

11 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

12 hours ago