இப்படியே போனா சரி வராது!...அது ஒன்னுதான் ஒரே வழி.. வேலையை தொடங்கிய தனுஷ்.!

by Manikandan |   ( Updated:2022-03-29 05:20:42  )
இப்படியே போனா சரி வராது!...அது ஒன்னுதான் ஒரே வழி.. வேலையை தொடங்கிய தனுஷ்.!
X

தற்போது தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கம்பேக் என்றால் அது தனுஷ் தான் போல. அந்தளவுக்கு அவரது மார்க்கெட் கொஞ்சம் கீழிறங்கி தான் உள்ளது. இவர் நடித்து கடைசியாக வெளியான கர்ணன் மட்டுமே திரைக்கு வந்து பெரிய வெற்றியை பெற்றது.

ஆனால் அதன் பிறகு வந்த ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம், மாறன் ஆகிய திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெறவில்லை. மீண்டும், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் உடன் பணியாற்றினால் தான் தனுஷ் வெற்றியை ருசிக்க முடியும் என்கிற நிலை வந்துள்ளது என கூறப்படுகிறது.

இருந்தாலும், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் இருவரும் அடுத்தடுத்த பெரிய படங்ளை கைப்பற்றி முன்னேறி வருகின்றனர். தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் நானே வருவேன் திரைப்படம் எப்படி வரும் என கூறமுடியாது. இப்பொது நல்லயில்லை என கூறி ஒரு பத்து வருடம் கழித்து நன்றாக இருக்கும் என கூறுவார்கள். புதுப்பேட்டை, மயக்கம் ஏன்ன படங்களில் ஏற்கனவே அனுபவம் பட்டாச்சி.

இதையும் படியுங்களேன் - இவளோ அழகா இருந்தும் நதியா ஏன் அதிக படங்களில் நடித்ததில்லை.?! வெளியாகிய பகீர் காரணம்.!

dhanush

அதனால் தனுஷ் தற்போது யாரை நம்பியும் பயனில்லை. நாமே படத்தை இயக்கி, நாமே ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்தால் தான் உண்டு என இறங்கிவிட்டார் போல. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஒரு திரைப்படம் தான். தனுஷ் நாயகனாக நடித்து இயக்க உள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, அதிதி ராவ் ஆகியோர் நடிக்க உள்ளனராம். இப்படதிற்கு நான் ருத்ரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். விரைவில் இப்பட ஷூட்டிங் விவரம் வெளியாகும் என கூறப்படுகிறது.

Next Story