50 கோடினு சொன்னாங்க! கடைசில சம்பள விஷயத்தில் இப்படி ஆகிப்போச்சே.. ராயன் படத்துக்கு இப்படியா?

Dhanush: கோலிவுட்டில் ஒரு மாஸ் நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். அவர் தற்போது ராயன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படத்தை இயக்கியதும் தனுஷ் தான். இது அவருக்கு 50 வது படம். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மாஸ் நடிகர்களை பொருத்தவரைக்கும் அவர்களுடைய 50ஆவது படம் என்பது அவர்கள் கெரியரில் மிகவும் முக்கிய படமாக அமைய வேண்டும் என நினைப்பார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் சேதுபதிக்கு அவரே நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஒரு பெரிய வெற்றியை மகாராஜா திரைப்படம் கொடுத்தது. அதேபோல் தனுஷுக்கும் இந்த படம் எந்த அளவு வரவேற்பை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த படத்திற்கு பிறகு தனுஷ் இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: கமல் படத்துல நடிச்சதுக்கு இதுதான் காரணம்… ஆனா பெரிய இழப்பு ஆகிடுச்சு… கபிலன் ஃபீலிங்

இன்னொரு பக்கம் சுதா கொங்கரா உடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படத்தில் தனுஷ் நடிக்கப் போவதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் அதில் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் சுதா கொங்கராவுடன் தனுஷ் இணைகிறாரா இல்லையா என்பது தெரியவில்லை.

இதற்கு இடையில் இந்த ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு தனுஷின் சம்பளம் 50 கோடி என்றும் 50 நாள் கால்சீட்டு தான் தருவார் என்றும் அவரைப் பற்றி சில செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன. ஆனால் ராயன் படத்தை பொருத்தவரைக்கும் தனுஷ் சம்பளமே வாங்கவில்லை என்ற ஒரு தகவல் பரவி வருகிறது.

இதையும் படிங்க: ரஜினி படத்துக்கு மியூசிக் போட வந்த வாய்ப்பு!.. எல்லாமே போச்சி!.. இசையமைப்பாளர் ஃபீலிங்!..

அதற்கு காரணம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கைதான் என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். அதாவது ஒரு வேளை ராயன் படத்திற்காக தனுஷ் சம்பளம் வாங்கவில்லை என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ஒரு நம்பிக்கையுடன் கூடிய இணக்கம் இருந்திருக்கும்.

அதன் காரணமாகவே தான் தனுஷ் சம்பளம் வாங்காமல் நடித்திருப்பார் என அந்தணன் கூறியிருக்கிறார் .அது மட்டும் அல்லாமல் ஏஜிஎஸ், லைக்கா போன்ற நிறுவனங்களைப் போல பண விஷயத்தில் பெரிய அளவு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பிரச்சினை கிடையாது. கேட்கிற சம்பளத்தை கொடுக்கக்கூடிய நிறுவனம்தான். இதையும் தாண்டி அவர் சம்பளம் வாங்கவில்லை என்றால் அதற்கு காரணம் இந்த நம்பிக்கைதான் என அந்தணன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: என்னதான் கல்கியா இருந்தாலும் எங்க தளபதி காலுக்கு கீழத்தான்!.. அப்படியொரு ரெக்கார்டு இருக்கு!..

 

Related Articles

Next Story