தனுஷுக்கே தெரியாத விஷயம்... கர்ணன் படத்தில் ஹிட் அடித்த அந்த காட்சி...

by Akhilan |   ( Updated:2024-08-25 07:10:44  )
தனுஷுக்கே தெரியாத விஷயம்... கர்ணன் படத்தில் ஹிட் அடித்த அந்த காட்சி...
X

#image_title

Dhanush: பரியேறும் பெருமாள் வெற்றிக்குப் பின் இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் தனுஷுடன் இணைந்து உருவாக்கிய படம்தான் கர்ணன். பரியேறும் பெருமாள் படத்தின் கதை, உருவாக்கம் ஆகியவற்றை வெளிப்படையாகவே பாராட்டியிருந்த தனுஷ், தனது அடுத்த படம் மாரி செல்வராஜூடன்தான் என 2018 நவம்பரில் அறிவித்தார்.

கார்த்திக் சுப்புராஜின் ஜெகமே தந்திரம் ஷூட் முடித்தபின்னர், மாரி செல்வராஜின் கர்ணன் ஷூட்டிங்கில் இணைந்தார் தனுஷ். 1995 கொடியங்குளம் படுகொலைகளை மையப்பத்திய கதை என்று ஒரு சில பத்திரிகைகள் எழுதிய நிலையில், அதை மாரி செல்வராஜ் மறுத்திருந்தார். ஒவ்வொரு சம்பவத்தில் இருந்தும் ஒரு உந்துகோலை நாம் எடுத்துக்கொள்ள முடியும் என்று சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க: விஜய் படத்துக்கு அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை… வழக்கம்போல தெறிக்கவிடுமா?

#image_title

படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்திருந்த ரஜீஷா விஜயனுக்கு இதுதான் முதல் தமிழ் படம். அதேபோல், யோகிபாபு கர்னணில்தான் முதல்முறையாக தனுஷூடன் இணைந்து நடித்திருந்தார். ஷூட்டிங் டைமிலேயே கையில் வாளுடன் தனுஷ் வெளியிட்டிருந்த போட்டோ வைரலானது.

இதையும் படிங்க: ரஜினியை ஹீரோவாக்காத பாலச்சந்தர்… பின்னணியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

உடனே மாரி செல்வராஜூக்கு போன் செய்து படம் பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து படம் பார்த்து முடித்த தனுஷ், மாரியை அழைத்து தங்கச்சி கேரக்டர் இவ்வளவு தூரம் கொண்டு வந்திருப்பீர்கள் என்று தெரியாது. அதற்கென தனியாகவே ஒரு பிம்பத்தைக் கொண்டு வந்துவிட்டீர்கள் என்று பாராட்டினாராம்.

Next Story