பாகுபலிக்கு போட்டியாக தயாராகும் தனுஷின் புதிய படம்.! இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.?

நடிகர் தனுஷ், சினிமாவுக்கு நடிப்பு என்றால் என்னவென்று தெரியாமல் வந்து, ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை மெருகேற்றி 2 தேசிய விருதை இளம் வயதில் பெற்ற நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். நடிப்பில் மட்டுமல்லாமல் மற்ற சினிமா துறையிலும் தனுஷ் ரெம்ப பிஸி.

தயாரிப்பாளராக, பாடகராக, பாடல் ஆசிரியராக இருந்த தனுஷ் பா.பாண்டி படம் மூலம் தான் ஒரு நல்ல இயக்குனர் என்பதையும் நிரூபித்து காட்டினார். அதனை தொடர்ந்து மீண்டும் அவர் இயக்க ஆரம்பித்த ஒரு படம் இன்னும் விடை தெரியாமல் இருக்கிறது.

அதில் நாகார்ஜுனா, அதிதி ராவ் என பலர் நடிக்க இருந்தனர். வரலாற்று படமாக இந்த படம் உருவாக இருந்தது. இந்த படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் எப்போது நடக்கும் என்றே தெரியவில்லை. இந்த படத்தினை பற்றிய அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகுமா எதிர்பார்த்து காத்திருந்த வேளையில்,

இதையும் படியுங்களேன் - சார் அந்த கிளாமர் பாட்டு எங்க இருக்கும்.! ஆர்வமாய் கேட்ட பிரியா பவானிசங்கர்.! அதிர்ந்து போன ரசிகர்கள்.!

பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இந்த படம் பற்றி பேசியிருந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ' தனுஷ் அடுத்த வரலாற்று படம் ஒன்றை தயாரித்து இயக்க இருக்கிறார். அதில் இவர்கள் நடிக்க உள்ளனர். இந்த படம் பாகுபலிக்கு போட்டியாக இருக்கும். இந்த பட கதை அப்படி இருக்குதாம். ' என்று கூறியுள்ளார். இதனை கேட்ட இணையவாசிகள் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? அந்த படத்தின் அடுத்தகட்ட நகர்வு இப்பொது வரையில் தெரியவில்லை என்று புலம்பி வருகின்றனர்.

 

Related Articles

Next Story