என்னங்க பேரு இது.. தனுஷின் DD4 டைட்டில் இதுதான்… அடடே! தனி ஆளு நீங்க!..
Dhanush: பொதுவாகவே சிலருக்கு சில விஷயங்கள் அழகாக வரும். அது போல தான் இயக்குனர் குடும்பத்திலிருந்து வந்த தனுஷ் இருக்கு இயக்கம் என்பது அசால்டாக மாறி இருக்கிறது. இதனால் அவர் தொடர்ந்து தன்னுடைய இயக்கத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
முதல் முறையாக ராஜ்கிரண் மற்றும் ரேவதியை வைத்து பா பாண்டி படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இருந்தும் அதைத்தொடர்ந்து தனுஷ் தன்னுடைய நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். பல ஆண்டுகள் கழித்து கடந்த வருடத்தில் தான் தொடர்ச்சியாக இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கினார்.
இதையும் படிங்க: மணிமேகலை சொல்றது உண்மைதான்… சக ஆங்கர் ரக்ஷன் சொல்வது என்ன?
அதில், அவர் நடிப்பில் சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் ராயன் சில மாதங்கள் முன்னர் வெளியானது. படம் பலரும் அதிரும்படி நல்ல வரவேற்பு பெற்று வசூலையும் குவித்தது. தற்போது இள நடிகர்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்.
குபேரன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷின் இயக்கத்தில் நான்காவது திரைப்படம் உருவாகிவிட்டது. இப்படத்தில் ராஜ்கிரண், அசோக் செல்வன், நித்யாமேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய இடத்தில் நடிக்க இருக்கின்றனர். அதிலும் அருண் விஜய் வில்லனாக களமிறங்குகிறார்.
இதையும் படிங்க: கைது செய்யப்பட்ட விஜய் பட பிரபலம்… தொடங்கியது வேட்டை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க இருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீப காலமாக தமிழில் முன்னணி ஹீரோக்கள் ஆங்கிலத்தில் பெயர் வைத்து வரும் நிலையில் தனுஷின் இந்த சுத்தமான தமிழ் பெயர் ரசிகர்களிடம் பெரிய அளவில் ஈர்ப்பை பெற்று வருகிறது.
தனுஷின் ட்வீட்டைக் காண: https://x.com/dhanushkraja/status/1836729865300570285