மாமனாரு வழியில் மருமகனா? எகிறிகொண்டே போகும் பிரபலங்கள்… DD4 அப்டேட்..
DD4: நடிகர் தனுஷை பார்ப்பதைவிட தற்போது இயக்குனர் தனுஷ் தான் ரசிகர்களுக்கு அதிகமாக தெரிந்து வருகிறார். அந்த வகையில் அவர் நான்காவது இயக்க இருக்கும் திரைப்படம் குறித்த அப்டேட்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாக்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். பிசியான அவர் நடிப்பு வாழ்க்கைக்கு மத்தியில் தற்போது இயக்கத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் இயக்கிய திரைப்படங்கள் இதுவரை நல்ல வரவேற்பை மட்டுமே பெற்று இருக்கிறது.
இதையும் படிங்க: ஆத்தாடி…பிபி7 முடிஞ்சும் இந்த டீம் ஏ, டீம் பி அடிச்சிக்கிறத நிறுத்தலையா… இன்னொரு பஞ்சாயத்தா?
ராஜ்கிரண் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான பா. பாண்டி திரைப்படம் இயக்குனர் தனுஷை தனி அடையாளம் காட்டியது. தொடர்ந்து சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படம் ஆக்சன் திரில்லராக அமைந்து ரசிகர்களிடம் பெரிய அப்ளாசை அள்ளினார். இதைத்தொடர்ந்து இள நடிகர்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்னும் காதல் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வித்தியாச ஜானர்களை இயக்கி வரும் தனுஷ் தன்னுடைய நான்காவது படத்தின் வேலைகளை தொடங்கி விட்டதாக தகவல்கள் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிக்க இருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகர் ராஜ்கிரண் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்றி இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: வேட்டையனில் என்னுடைய கேரக்டர் இதுதான்.. சீக்ரெட்டை உடைத்த மஞ்சு வாரியர்… ஜாலி பண்ணும் ரசிகர்கள்
இந்நிலையில் 38 வருடத்திற்கு பின்னர் தனுஷின் மாமனாரும் நடிகருமான ரஜினிகாந்த் உடன் சத்யராஜ் இணைந்திருக்கும் நிலையில் தற்போது இந்த கூட்டணியும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.