விவாகரத்து திட்டமிட்ட நாடகம்?... தனுஷ் விவாகரத்தில் அதிரடி திருப்பம்....!
நடிகர் ரஜினி எப்போதும் தனது மகள்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவாராம். இதை அவரே பலமுறை கூறியுள்ளார். முதலில் குடும்பம் பின்பு தான் எதுவாக இருந்தாலும் என்பதுதான் ரஜினியின் எண்ணமாக இருந்துள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா 3, வை ராஜா வை ஆகிய படங்களை தொடர்ந்து தனது புதிய படவேலையில் இறங்கியுள்ளார். ஆனால் சில மாதங்களாகவே ஐஸ்வர்யாவின் போக்கும் பழக்கமும் சரியில்லை. முழுக்க முழுக்க படவேலையை மட்டும் பார்க்கும் அவர் குடும்பத்தை கண்டுகொள்வது இல்லை என்பது போன்ற தகவல்கள் ரஜினியின் காதுக்கு வந்துள்ளது.
இதனால் கடுப்பான ரஜினி குடும்பத்தினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி ஐஸ்வர்யாவுக்கு புத்திமதி கூறியுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா அதை கேட்பதாக இல்லையாம். இதனால் ஐஸ்வர்யாவுக்கு ஒரு ஷாக் கொடுக்க நினைத்த குடும்பத்தினர் பிரிவு என்ற ஒரு முடிவை அவரின் கணவர் தனுஷை வைத்து அறிவிக்க வைத்திருக்கிறார்கள்.
அதாவது தனுஷ் மூலம் ஒரு சிறிய பிரிவு நாடகம் தான் நடத்தப்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கிறார்கள். மேலும் இவர்கள் இருவருக்குமான பிரிவு என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடாது. விரைவில் சுமூக முடிவுக்கு வந்து விடும் என கூறுகிறார்கள்.
இதனால் கோலிவுட்டில் சற்று பரபரப்பு நிலவி வருகிறது. நாளுக்கு நாள் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து விஷயத்தில் ஏதேனும் ஒரு புதிய தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்து வருகிறது. இதுகுறித்து அவர்களே வாய் திறந்தால் தான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்.