
Cinema News
ரவுடி பேபி பாடலின் மூலம் தனுஷ் சம்பாதித்தது எத்தனை கோடி தெரியுமா? அப்படியே ஷாக் ஆகிடுவீங்க!
பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாரி 2. இந்த படத்தை தனுஷ், தனது நிறுவனம் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ் & கிருஷ்ணா குலசேகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

dhanush
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்த படத்தில் ரௌடி பேபி பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இந்த பாடல் தற்போது 1.2 பில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்த ஒரு பாடலின் மூலம் தயாரிப்பாளரான தனுஷ் இதுவரை ரூ. 33 கோடி சம்பாதித்திருக்கிறாராம். இது கிட்டத்தட்ட மாரி 2 படத்தின் தயாரிப்பு செலவு இந்த ஒரு பாடலின் வருமானத்தில் அடங்கிவிட்டதாம்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்