தனுஷிற்கு வந்த சத்திய சோதனை....! பூகம்பத்தை கிளப்பிய வக்கீல் நோட்டீஸ்...
தன் அசுரத்தனமான நடிப்பால் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். திரைப் பின்புலத்தில் இருந்த வந்தாலும் நாளுக்க நாள் இவரின் நடிப்பை பார்த்து மிரண்டு போய் வருகின்றனர். அந்த அளவிற்கு தன் நடிப்பு திறமையால் அசுர வளர்ச்சி அடைந்தார்.
ஆனால் அசுரன் படம் தான் இவர் நடிப்பில் வெளியாகி கடைசியாக ஹிட் அடித்த படமாக இருந்தது. அதில் இருந்தே சரி சினிமா வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் பெரும் சோதனையை அனுபவித்து வருகிறார். இவரின் சமீபகால படங்கள் சரியாக ஓடவில்லை. தற்போது ஹாலிவுட் பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ளார்.
இந்த நிலைமையில் தான் தாங்கள் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறோம் என்று பெரிய குண்டை தூக்கி போட்டார்கள் தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும். இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது. இந்த பிரச்சினை போதாதென்று ஏற்கெனவே பல மாதங்களாக ஒரு பெரிய சிக்கலில் சிக்கிதவிக்கும் தனுஷ் மீண்டும் அது பூதாகரமாக வெடித்துள்ளது. மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தனுஷ் எங்களுடைய மகன் என்ற பிரச்சினையை கொண்டு வந்தனர்.
இது பல மாதங்களாக நடந்து வருகிறது. தனுஷ் தரப்பில் ஒன்று அவர்கள் தாங்கள் செய்தது தவறு என்று ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் 10 கோடி நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என கூறினார். ஆனால் மதுரை தம்பதி எதற்கும் அசராமல் நாங்கள் இந்த பிரச்சினையை கோர்ட் மூலமாக பார்த்துக் கொள்கிறோம் என்று பதிலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி தனுஷ் தரப்பை திக்கு முக்காட வைத்துள்ளனர்.