தலைப்பை நம்பி மோசம் போன ரசிகர்கள் !...தனுஷுக்காக பல கிலோமீட்டர் கடந்து வந்து காத்துக்கிடக்கும் அவலம் !...(வீடியோ)
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் தனுஷ். இவருக்கு இப்பொழுது ராகு உச்சம் பெற்றிருக்கிறார் என தெரிகிறது. அந்த அளவுக்கு வளர்ச்சி அபார வளர்ச்சியடைந்து வருகிறார். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படல் நல்ல வசூலை பெற்றது.
அதை அடுத்து இன்று வெளியான நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பக்கம் செல்வராகவனின் பழைய ஃபார்ம், யுவனின் மிரட்டலான இசை, தனுஷின் அசாத்திய நடிப்பு மொத்தத்தையும் ஒருசேர பார்க்கும் ரசிகர்களுக்கு இது ஒரு ஸ்வீட் காரம் போன்றது தான்.
அந்த அளவுக்கு இன்று வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது நானே வருவேன் திரைப்படம். இந்த நிலையில் இந்த படத்தை முதல் ஷோவில் பார்க்க பெங்களூரில் இருந்து பலபேர் வந்துள்ளதாக தெரிவித்தனர்.
படத்தை பார்க்கிறோமோ இல்லையோ ரோகிணி தியேட்டருக்கு தனுஷ் கண்டிப்பாக வருவார். அவரை கண்டிப்பாக பார்த்துவிட்டு தான் எங்கள் ஊருக்கு திரும்புவோம் என்று உறுதியாக தியேட்டர் வாசலிலயே காத்துக் கொண்டிருக்கின்றனர் தனுஷ் ரசிகர்கள். ஒருவேளை நானே வருவேன் படத்தலைப்பால் ஏமாந்து போய் வந்திருக்கலாம் என தெரிகிறது. நாமும் பொருத்திருந்து பார்ப்போம். தனுஷ் வருவாரா? இல்லையா? என்று.