புரோடியூசர் கவுன்சிலால் தனுஷுக்கு வந்த நெருக்கடி.. இனி உங்க ஆட்டம் இங்க செல்லாது மாமே!..
கோலிவுட் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். எம்ஜிஆர் -சிவாஜி, ரஜினி -கமல் , விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக நிலையான இடத்தை தக்க வைத்து இருக்கிறார் தனுஷ்.
கோலிவுட்டில் இருந்து பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் தன்னுடைய அங்கீகாரத்தை நிரூபித்தவர். தமிழ் சினிமாவிற்கு ஒரு பெருமையாக திகழ்ந்தவர். இளைய தலை முறை நடிகர் ஆயினும் ஒரு பக்குவம் கொண்ட நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் தனுஷ்.
இவனெல்லாம் ஒரு நடிகனா? இந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு எப்படி நடிப்பான்? என்று ஆரம்ப காலத்தில் இவர் சந்தித்த விமர்சனங்கள் ஏராளம் . அதையும் தாண்டி தன்னுடைய கடின முயற்சியாலும் உழைப்பாலும் இந்த இடத்திற்கு வந்து நிற்கிறார் தனுஷ்.
ஒரு இயக்குனரின் மகன் என்பதையும் தாண்டி தன்னுடைய அந்தஸ்தை வலுவாக நிலை நிறுத்தி காட்டியிருக்கிறார். தனுஷும் கமல் ,விக்ரமை போலவே வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து மக்கள் மனதை வென்றவர்.
இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக திகழும் தனுஷை சுற்றி எப்பொழுதும் ஒரு 14 பேர் கொண்ட ஒரு குழு வலம் வந்து கொண்டு இருக்குமாம். அவர்கள் வேறு யாரும் இல்லை தனுசுக்கு தேவையான சேவைகளை செய்வதற்காகவே.
அதாவது ஒரு சில நடிகர்கள் தங்களுடைய சிகை அலங்காரம் ,உடை அலங்காரம் என்பதற்காக இரண்டு மூன்று பேர்களை மட்டும் உதவியாளர்களாக வைத்திருப்பார்கள் .ஆனால் தனுஷ் அதற்காக 14 பேரை எப்பொழுதும் படப்பிடிப்பிற்கு வரும்போது அழைத்துக் கொண்டு வருவாராம்.
இது ஒரு பக்கம் தயாரிப்பாளர்களுக்கு செலவுகளை ஏற்படுத்தும் என்று கருதினாலும் தனுஷ் அதைப்பற்றி எப்பொழுதும் கவலை கொண்டது இல்லையாம். ஆனால் அதற்கு இப்பொழுது ஆப்பு வைக்கிற மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
சமீபத்தில் தயாரிப்பாளர்களுக்கான தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்றது. அதில் ஒரு குழு வெற்றி பெற்றது .அவர்களுடைய முதல் வேலையே இப்படி தேவையில்லாத செலவுகளை தயாரிப்பாளர்களுக்கு வைக்க கூடாது என்ற கண்டிஷனை போடுவது தானாம்.
இதையும் படிங்க : மனோபாலா மரணம்!.. லியோ படத்திற்கு வந்த சிக்கல்!.. எப்படி சமாளிக்க போகிறார் லோகேஷ்?!…