தம்பிக்கு அல்வா கொடுத்த செல்வராகவன்...! செஞ்ச உதவியை கூட மறந்து மனுஷன் பண்ண காரியத்தை பாருங்க...

தமிழ் சினிமாவில் அசுரத்தனமான நடிப்பால் தமிழ் சினிமாவை புரட்டி போட்டவர் நடிகர் தனுஷ். இப்படியும் நடிக்க முடியுமா என்ற கேள்விக்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறார் தனுஷ். ஆரம்பகாலத்தில் இவர் நடித்த படங்களை பார்க்க தயங்கிய மக்கள் இன்று பண்டிகையை கொண்டாடுவது போல கொண்டாடி வருகிறார்கள்.
அப்படி ஒரு மாற்றத்தை தன்னுள் கொண்டு வந்து ஹாலிவுட், பாலிவுட் வரை கலக்கி வருகிறார் தனுஷ். நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் தன் குடும்பத்தின் மேல் அலாதி அன்பு கொண்டவராகவும் இருந்து வருகிறார். அதுவும் தன் அண்ணன் ஒருத்தர் போதும். அவர் மேல் அந்தளவிற்கு அன்பு கொண்டவர்.
இந்த நிலையில் சிறு வயதில் இருக்கும் போது தனுஷிற்கும் செல்வராகவனுக்கும் இடையே நடந்த ரகளை பற்றி அவர்களின் சகோதரிகள் வெளிப்படுத்தினார்கள். செல்வராகவன் நாவல் படித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு குட் டே பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்குமாம்.
படிக்கும் போது தனுஷை பிஸ்கட் வாங்கி வர சொல்வாராம். தனுஷும் கொண்டு வந்து கொடுப்பாராம். இது தினமும் நடக்கும் நிகழ்வு. இதில் தனுஷிற்கு இருக்கும் ஆதங்கம் என்னவெனில் இவ்ளோ நாள் வரை வாங்கி வந்து கொடுத்துள்ளேன். ஒரு நாள் கூட தம்பி நீயும் சாப்பிடு என்று ஒரு பிஸ்கட் கூட கொடுத்ததில்லையாம். முழு பாக்கெட்டையும் செல்வராகவே சாப்பிட்டு விடுவாராம். இதை ஒரு பிரஸ் மீட்டில் அவரது சகோதரிகள் தெரிவித்தனர்.