Cinema News
ஒரே வார்த்தை!.. நயன்தாராவுக்கு பதிலடி கொடுத்த தனுஷ்.. அப்படி என்னப்பா சொன்னாரு?..
நடிகர் தனுஷ் விருது வழங்கும் விழாவில் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
Actor Dhanush: தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான நடிகராக இருந்து வருகின்றார் நடிகர் தனுஷ். ஒரு பக்கம் தனது இயக்கத்தின் படங்கள், மற்றொருபுறம் மற்ற இயக்குனர்களின் படங்கள் என்று நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று நடிகர் தனுஷ் இருந்து வந்தாலும் இவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.
இதையும் படிங்க: Vidamuyarchi: காலர் டியூனை செட் பண்ணிக்கோங்க.. வைரலாகும் ‘விடாமுயற்சி’ படத்தின் தீம் மீயுஸிக்
நயன்தாரா அறிக்கை:
கடந்த மாதம் நடிகை நயன்தாரா மூன்று பக்க அளவிற்கு நடிகர் தனுஷ் குறித்து காட்டமாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. நடிகை நயன்தாராவின் டாக்குமெண்டரியில் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து மூன்று வினாடி காட்சிகளை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்கின்றார் என்று கூறி அந்த அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாக பலரும் நடிகர் தனுஷை சமூக வலைதள பக்கங்களில் திட்டி வந்தார்கள். இதையடுத்து நடிகர் தனுஷின் வழக்கறிஞர் தரப்பிலிருந்து நயன்தாரா மீதும், Netflix நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு நயன்தாரா தரப்பு பதில் அளிக்க வேண்டும் என்று கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றது.
தனுஷின் விவாகரத்து:
இது ஒரு புறம் இருக்க நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக அறிவித்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகி சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று தெரிவித்த காரணத்தால் தனுஷ்-ஐஸ்வர்யா திருமணம் செல்லாது என்று அறிவித்து நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
படங்களில் கவனம்:
இப்படி தன்னை சுற்றி எந்த ஒரு சர்ச்சை இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நடிகர் தனுஷ் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இது இல்லாமல் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி பூஜை போடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிப்பதற்கும் தயாராகி வருகின்றார்.
அம்ரித் ரத்னா 2024 விருது:
நடிகர் தனுஷுக்கு நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பாக அம்ரித் ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு விருதினை வாங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு கிளீன் ஷேவ் செய்து 10 வருடத்திற்கு முன்பு தனுஷ் எப்படி இருந்தாரோ அதே போல் வந்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் உங்களுக்கு டிஏஜிங் தேவையே இல்லை என்று கூறி வருகிறார்கள்.
ஓம் நமச்சிவாயா:
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ் மைக்கை வாங்கியதும் ஓம் நமச்சிவாயா என்று ஆரம்பித்தார். அதை தொடர்ந்து கொலவெறி பாடல் குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பியதும் அப்பாடல் உருவான விதம் குறித்து பேசிய தனுஷ் அந்த பாடலில் இருந்து இரண்டு வரிகளையும் பாடியிருந்தார்.
இதையும் படிங்க: கல்கி பாகுபலி கேஜிஎஃப் எல்லாம் ஓரமாபோங்க!.. ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் புஷ்பா 2..!
இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நடிகர் தனுஷ் ஒரு இன்டர்நேஷனல் விருது வழங்கும் விழாவில் ஓம் நமச்சிவாயா என்று கூறி இருந்ததை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவுக்கு இது சரியான பதிலடி என்று கூறி வருகிறார்கள். மேலும் அவரின் வீடியோவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள். இதெல்லாம் பத்தாது இன்னும் தனுஷ் நயன்தாராவுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.