Categories: latest news

நேருக்கு நேர் மோதும் சூர்யா-தனுஷ்… இதுல இவங்க வேறயா?!… 2025 சுமார் தாறுமாறா இருக்கப்போது!…

நடிகர் தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ள நிலையில் அது சூர்யா 44 திரைப்படத்துடன் வெளியாகவுள்ளது தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகின்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த பவர் பாண்டி என்கின்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் தனுஷ் கடைசியாக வெளியான 50-வது திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்திருந்தார். இயக்கம் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக தொடர்ந்து படங்களை இயக்கி வருகின்றார்.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: ‘காதல்ல இருக்கேன்’ வெளில போனதும் கல்யாணம்தான்!.. அருண் சொல்லிட்டார்!..

தன்னுடைய 3-வது திரைப்படமான நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற படத்தையும் இயங்கி முடித்து விட்டார். முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார் நடிகர் தனுஷ். அதை தொடர்ந்து தற்போது தனது இயக்கத்தில் 4-வது படமான இட்லி கடை என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்று காலை வெளியிட்டு இருந்தார்.

அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாகவும் தனுஷுக்கு ஜோடியாக நித்யாமேனனும் நடித்து வருகின்றார். மேலும் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இப்படத்தின் சூட்டிங் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது அதன் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கின்றார்.

இது ஒரு புறம் இருக்க அடுத்ததாக தான் நடிக்க இருக்கும் தனுஷ்55 வது திரைப்படத்தின் பூஜை புகைப்படமும் வெளியாகி இருக்கின்றது. அதன்படி அமரன் திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தான் அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிக்க இருக்கின்றார்.

இப்படி தனுஷ் படத்தில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்து அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றது, இந்நிலையில் நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படம் நேரடியாக நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படத்துடன் மோத இருக்கின்றது. நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த திரைப்படமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த 2 திரைப்படங்களும் நேருக்கு நேர் மோத இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதே போல் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 23 திரைப்படமும், நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் மே ஒன்றாம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: Srikanth: இவன் கூட படம் பண்ணவே கூடாது! ஸ்ரீகாந்தை பற்றி சுந்தர் சி சொன்னதுக்கு பின்னாடி இதான் காரணமா?

2025 ஆம் ஆண்டு முதல் பாதியில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதாக இருப்பதால் பாக்ஸ் ஆபிஸில் எந்த திரைப்படம் சாதனை படைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ramya suresh

Recent Posts

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

7 minutes ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

1 hour ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

7 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

9 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

9 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

9 hours ago