தனுஷ் வாழ்க்கையில் இனிமே அது நடக்காது!.. அவரு ஒரு முடிவோட தான் இருக்காரு..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக உச்சம் பெற்றவர் நடிகர் தனுஷ். ‘இவன் எல்லாம் ஒரு ஆளா’ என்று பல விமர்சனங்கள் வந்த நிலையிலும் அதை எல்லாம் காதில் வாங்காமல் தொடர்ந்து தனது முயற்சியால்,இன்று விஸ்வரூபம் அடைந்திருக்கிறார். அந்த முயற்சி தான் ஹாலிவுட்டின் கதவையும் தட்டியது.
அங்கும் தன் பெருமையை நிலை நாட்டி இருக்கிறார் தனுஷ், சமீபத்தில் இவரின் நடிப்பில் ரிலீஸான ‘வாத்தி’ படம் பெரும் அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரான இந்தப் படத்தை வெங்கி அட்லூரி என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கியிருந்தார்.
இதற்கு முன் தெலுங்கு இயக்குனர்கள் விஜய் , சிவகார்த்திகேயனை வைத்து கொடுத்த படங்களின் தாக்கம் தனுஷ் படத்திற்கும் ஏற்பட்டு விடுமோ என்ற ஒரு சிறிய பயம் இருந்தது. ஆனால் படம் வெளியாகி இதுவரை நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது.
தனுஷின் சினிமா வாழ்க்கை அவர் நினைத்ததை விட பயங்கர சந்தோஷமாக இருந்தாலும் அவரது சொந்த வாழ்க்கை தான் கேள்விக் குறியாக இருக்கிறது. மனைவியை பிரிந்து வாழும் தனுஷ் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற குழப்பம் ரசிகர் மத்தியிலும் சரி பிரபலங்கள் மத்தியிலும் சரி இருந்து வந்தது.
இதற்கு ஒரு தெளிவான பதிலை கொடுத்திருக்கிறார் செல்வராகவன். செல்வராகன் நடித்த ‘பகாசுரன்’ படமும் வாத்தி படத்தோடு மோதி அதுவும் ஒரு பக்கம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக செல்வராகவனை பேட்டி எடுத்த போது தனுஷை பற்றி சில தகவல்களை கூறினார்.
அதாவது செல்வராகவன் முதலில் நடிகை சோனியா அகர்வாலை தான் திருமணம் செய்திருந்தார். ஆனால் கொஞ்ச நாளிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். அந்த சமயத்தில் தனுஷ் செல்வராகவனிடம் ‘இத்தோடு ஓடிரு, இனிமேல் இந்த தப்பை பண்ணாதே, ஆண்டவன் உனக்கு ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கிறான், எப்பொழுதும் சிங்கிளாவே இரு , அதான் நல்லது’ என்று அறிவுரை வழங்கினாராம்.
இதையும் படிங்க : ஷங்கர் பண்ன அந்த வேலை!. கடுப்பாகி சினிமாவில் நடிப்பதையே நிறுத்திய சாலமன் பாப்பையா!..
அண்ணனுக்கே இந்த அறிவுரை என்றால் தான் மட்டும் கடைபிடிக்க மாட்டாரா என்ன? ஆகவே தனுஷ் காலம் முழுவதும் சிங்கிளா இருக்கத்தான் ஆசைப்படுகிறார் என்று செல்வராகவன் சொன்னதில் இருந்தே தெரிகிறது.