இன்னும் எத்தன போராட்டம்னு தெரியலயே!.. வாள் ஏந்தும் இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைத்த தனுஷ்..
இந்திய சினிமாவையே மிரளவைத்த நடிகர் என்றால் அது தனுஷ்தான். இவ்ளோ சிறு வயதில் ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவின் பெருமையை நிலை நாட்டியவர். ஒரு நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக எல்லா துறைகளிலும் கலக்கி வருகிறார்.
ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வரும் தனுஷின் பெரும்பாலான படங்கள் சமீபகாலமாக மக்களை நல்ல முறையில் சென்றடைகிறது. அந்த வகையில் தனுஷின் கெரியரை ஓரளவுக்கு தூக்கி நிறுத்தியவர் இயக்குனர் வெற்றிமாறன். இருவரும் சேர்ந்து 4 படங்களிலும் தொடர்ந்து பணியாற்றியிருக்கின்றனர்.
அதுவரைக்கும் காதல், காமெடி கதை உள்ள படங்களிலேயே நடித்து வந்த தனுஷை தலை நிமிர வைத்தவர் வெற்றிமாறன் தான். அதிலும் அசுரன் படத்தில் தனுஷின் நடிப்பு பிரம்மாதம். இந்த வகையிலேயே அடுத்ததாக வந்த படம் தான் ‘கர்ணன்’. ஒரு குறிப்பிட்ட சமூகம் ஒடுக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்தும் ஒரு கிராமம் பற்றிய கதை தான் கர்ணன்.
இந்தப் படத்திலும் தனுஷின் நடிப்பு பாராட்டும்படியாக அமைந்தது. இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குனர் மாரி செல்வராஜ். ஏற்கெனவே பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் மாரி செல்வராஜ்.
இரண்டாவது படம் தான் கர்ணன். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஒரு புரட்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. சாதிப் பிரச்னைகள், சாமானிய மக்களிடமிருந்து பிடுங்கப்படும் உரிமைகள், இதில் கலந்திருக்கும் அரசியல் என அனைத்தையும் பாரபட்சமில்லாமல் படத்தின் மூலம் காட்டுபவர்தான்
மாரிசெல்வராஜ்.
இந்த நிலையில் தனுஷ் புரடக்ஷனில் மீண்டும் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போகிறாராம். இந்த செய்தி தான் இப்போது வைரலாகி வருகிறது. தனுஷை மக்கள் இன்னும் வேற கோணத்தில் பார்ப்பார்கள் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : ஜெய்சங்கருக்கு மக்கள் வைத்த இன்னொரு பெயர்… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!