தமிழ் சினிமாவில் ஒரு வெறித்தனமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். நடிப்பு அசுரன் என்றே அவரை அழைத்து வருகின்றனர். சமீபகாலமாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள், கதாபாத்திரங்கள் எல்லாம் ரசிகர்களை வியப்படையவைக்கின்றன. கேப்டன் மில்லர் படத்தில் கூட ஒரு அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்துவார் என்றே தெரிகிறது.
அது அந்த படத்தின் டீசரில் இருந்தே தெரிகிறது. பேர் புகழை அடைந்தாலும் அவரை பற்றிய விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே வருகிறது. அதாவது சில சமயங்களில் தொடர்ச்சியாக பல படங்களை கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் வைக்கிறார். சில சமயங்களில் இரண்டு வருடங்கள் ஆனாலும் அவர் படங்கள் வருவதில் தாமதம் ஆகின்றது.
இதையும் படிங்க : சிலிக்கான் சிலையோ.. சிறுவாய் மலரோ!.. கிளுகிளுப்பு உடையில் கிக் ஏத்தும் கீர்த்தி சுரேஷ்…
இதற்கு காரணம் தனுஷ் நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வரமாட்டாராம். மேலும் வெகு நாள்களாக காக்க வைப்பாராம். கால்ஷீட் கொடுத்தாலும் கொடுத்த நேரத்திற்கு முடித்து கொடுக்க தாமதப்படுத்துவாராம்.
அதுமட்டுமில்லாமல் இப்போது ஒரு நேரடி தெலுங்கு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார் தனுஷ். சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாக இருக்கும் அந்த படத்தில் நடிப்பதற்காக மூன்று வருடங்களுக்கு முன்பே அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார்.
இதையும் படிங்க :சன் டிவிக்கு விஜய் மீது அப்படியென்ன காண்டு!.. கொந்தளிக்கும் ரசிகர்கள்.. என்ன ஆச்சு தெரியுமா?
ஆனால் அந்தப் படம் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகுதான் ஆரம்பமாகும் என தெரிகிறது. மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏற்கனவே நடித்த தொடரி படத்தின் தோல்வியால் தொடர்ந்து அந்த தயாரிப்பில் நடிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறாராம். கேப்டன் மில்லர் படம் கூட சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் தான்.
ஆனால் இதையும் தாண்டி தனுஷின் நடிப்பிற்கு என தீனி போட்ட படங்களாக அசுரன், கர்ணன், வடசென்னை போன்ற திரைப்படங்களை குறிப்பிடலாம். இவையெல்லாம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த திரைப்படங்களாகும். இதை போல மற்ற நடிகர்களுக்கு இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தனுஷ் கொஞ்சம் உயரத்தில் தான் இருக்கிறார் என பிரபல சினிமா பத்திரிக்கையாளர் கூறினார்.
இதையும் படிங்க : ‘புரட்சித்தலைவி’ பட்டத்திற்கு காரணமே சோபன் பாபுதானா? ஜெயலலிதா செய்த புரட்சியை நக்கலடித்த பிரபலம்
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…