நயன் - விக்கி திருமண வீடியோ வராம போனதுக்கு காரணமே தனுஷ்தானாம்!.. என்னாப்பா சொல்றீங்க!..

by சிவா |   ( Updated:2024-08-27 04:53:41  )
dhanush
X

#image_title

Nayanthara: கேரளாவை சேர்ந்த நயன்தாரா ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். 2வது படமே ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்தார். துவக்கத்தில் இவரால் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க முடியவில்லை. விஜய் நடிப்பில் வெளியான சிவகாசி படத்தில் கூட ஒரு பாடலுக்கு மட்டுமே வந்து நடனமாடினார்.

சூர்யா நடிப்பில் உருவான கஜினி படத்திலும் இவருக்கு 2வது கதாநாயகி வேடம்தான். அதுவும் பெரிதாக முக்கியத்துவம் இல்லாத ஒரு வேடத்தில் நடித்தார். துவக்கத்தில் கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்த நயன் உடலமைப்பிலும் கொஞ்சம் குண்டாகவே இருந்தார். அதன்பின் உடல் எடையை குறைத்து சிக்கென மாறினார்.

nayan

ராஜா ராணி படத்தின் வெற்றி அவரை ஒரு முன்னணி நடிகையாக மாற்றியது. அதன்பின் பல ஹிட் படங்களிலும் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். ஒரு கட்டத்தில் லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டமும் இவருக்கு கிடைத்தது. ரஜினி, விஜய், அஜித் என பெரிய நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடிக்க துவங்கினார்.

சிம்பு, பிரபுதேவா என இரண்டு பேரை காதலித்து பின்னர் அது பிரேக்கப் ஆனது. அதன்பின், நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அப்படத்த இயக்கிய விக்னேஷ் சிவனை காதலித்தார். சில வருடங்கள் இருவரும் காதலர்களாக சுற்றி வந்தனர். அதன்பின் 2022ம் வருடம் ஜூன் மாதம் இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது ஓடிடி ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமாகி கொண்டிருந்த நேரம் என்பதால் தனது திருமணத்தை வீடியோவாக எடுத்து அதில் காசு பார்க்க நினைத்த நயன்தாரா நெட்பிலிக்ஸ் நிறுவனத்துடன் டீல் போட்டார். வீடியோ எடுக்கும் வேலை இயக்குனர் கவுதம் மேனனிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், திருமணம் முடிந்து 2 வருடங்கள் ஆகியும் அந்த வீடியோ இதுவரை நெட்பிளிக்ஸில் வெளியாகவில்லை.

nayan

#image_title

இந்நிலையில், இப்போதுதான் அதற்கான காரணம் தெரியவந்திருக்கிறது. அந்த வீடியோ ஃபுட்டேஜ்ஜில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் நடந்த நிறைய விஷயங்களை இணைத்திருக்கிறாராம் விக்னேஷ் சிவன். ஏனெனில், அந்த படப்பிடிப்பில்தான் இருவருக்கும் காதல் உண்டானது. ஆனால், அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பதால் அவர் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

ஆனால், நானும் ரவுடிதான் படத்தின் பட்ஜெட் சொன்னதை விட அதிகரித்ததால் விக்னேஷ் சிவனிடம் கோபப்பட்டார் தனுஷ். எனவே, நயன்தாராவே மீது பணத்தை போட்டு படத்தை எடுத்து முடித்தார்கள். அதன்பின், அவர்கள் இருவரிடமே தனுஷ் பேசவில்லை. எனவே, விக்கி தரப்பு தனுஷை தொடர்பு கொள்ளமுடியவில்லை. அதனால்தான் விக்கி - நயன் திருமண வீடியோ இதுவரை நெட்பிளிக்ஸில் வெளியாகவில்லையாம்.

இதையும் படிங்க: லோகேஷ் எடுக்கிறது கூலி இல்லையாம்… ஜெயிலர்2வாம்… என்னங்க புது குழப்பம்..

Next Story