விஸ்வரூபம் எடுக்கும் அஜித், தனுஷ் படம்! கைவிடப்பட்ட நிலையில் தூசி தட்டி மறுஜென்மம் கொடுத்த நம்ம மில்லர்

நடிகர் பரத் ஒரு பேட்டியில் செல்வராகவன் தன்னை வைத்து ஒரு படம் எடுக்க முயற்சித்தார் என்றும் நான் மட்டுமில்லாமல் அந்தப் படத்தில் அஜித் மற்றும் தனுஷையும் நடிக்க வைக்கவேண்டும் என்று முயற்சித்தார் என்றும் கூறினார்.

செல்வராகவன் இயக்கத்தில் அனுஷ்கா மற்றும் ஆர்யா நடிப்பில் வெளிவந்த படம் இரண்டாம் உலகம். இந்தப் பட தயாராகும் முன்பே செல்வராகவன் ஒரு ஸ்கிரிப்டை எழுதி அதில் அஜித், தனுஷ் மற்றும் பரத்தை நடிக்க வைக்க நினைத்தாராம்.

இரண்டாம் உலகம் படம் வெளியாகி அந்தப் படம் எந்தளவுக்கு ப்ளாப் ஆனது என்றும் அனைவருக்கும் தெரியும். அதனால் இவர்களை வைத்து தயாரிக்க இருந்த அந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டாராம் செல்வராகவன்.

இதையும் படிங்க : விஜய் போட்ட டீலிங்கில் கதிகலங்கிய ஏஜிஎஸ் நிறுவனம் – ‘தளபதி 68’ல் நடந்த குதிரை பேரம்

ஆனால் அந்தக் கதை மிகவும் அற்புதமான கதையாம். இந்த நிலையில் தனுஷ் மீண்டும் அந்தப் படத்தை எடுக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருகிறாராம். செல்வராகவனிடமும் அந்தக் கதையை மீண்டும் நாம் எடுக்கலாம் என்று கூறியிருக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல் அஜித்தை நடிக்க வைக்க முடியாது, அவர் லெவல் இப்பொழுது எங்கேயோ போய்விட்டது, அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைக்கலாம், ஆனால் பரத்தை பற்றி கவலை இல்லை. அவர் கண்டிப்பாக நடிப்பார், அதனால் அந்தக் கதையை நாம் பண்ணலாம் என தனுஷ் செல்வராகவனிடம் கூறியிருக்கிறாராம்.

இதையும் படிங்க : வில்லனாக அறிமுகமாகி ஹீரோ ஆன நடிகர்கள்!.. ஹீரோவாக ஜெயிக்க முடியாமல் போன ஆனந்தராஜ்!..

ஏற்கனவே துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், நானே வருவேன் போன்ற படங்களை தனுஷை வைத்து எடுத்த செல்வராகவன் இந்தப் படத்தையும் தம்பிக்காக எடுப்பார் என்று சொல்லப்படுகிறது.

Rohini
Rohini  
Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it