அவன் வந்ததுல சந்தேகமா இருக்கு… தனுஷ் கர டிரெய்லர்

Published on: April 19, 2026
kara trailer
---Advertisement---

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளீவர உல்ள படம் கர. போர்தொழில் வெற்றிபடத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிகுமார், கருணாஸ் , ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளன்ர். கி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் வந்தபோதே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் கர படத்தின் டிரைலர் இன்று வெளியானது. 1991-ஆம் ஆண்டு வளைகுடா போர் காலகட்டத்தில் நடக்கும் கதையாக இது அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் நடந்த ஒரு நிஜ வங்கி கொள்ளை மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. வன்முறையை விட்டு விலக நினைக்கும் ஒருவன், மீண்டும் தன் குடும்பத்திற்காக எப்படி அந்த சம்பவத்திற்குள் நுழைகிறான் என்பதே கர படத்தின் மையக்கருவாக தெரிகிறது.

தனுஷ் வழக்கம்போல பின்னியிருக்கிறார். தேவையற்ற மாஸ் காட்சிகள் இல்லமல் கதைக்கு என்ன தேவையோ அதனி செய்திருப்பது நன்கு தெரிகிறது. இதுவரை ஆடம் பாட்டம் என்று பார்த்த மமிதா பைஜூவின் வேறு பரிமாணம் இப்பத்தில் வெளிகொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை டிரெய்லரின் மிகப்பெரிய பலம். இப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகிறது. இப்படம் தணிக்கை குழுவால் ‘U/A’ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.