பிச்சைக்காரராக தனுஷ்!... சண்டை செய்யும் உச்ச நடிகர்… குபேரா படத்தின் கதை இதுதானா?
Dhanush: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து ரிலீஸாக இருக்கும் குபேரன் படத்தின் முக்கிய தகவல்கள் இணையத்தில் லீக்காகி இருக்கிறது. கேப்டன் மில்லரின் தோல்வியை தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களை சமாதானம் செய்யும் நோக்கில் தனுஷ் பழைய பன்னீர்செல்வமாக களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் நடிப்பிற்காக மிகவும் விமர்சிக்கப்பட்டார். ஆனால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களிலேயே நடிப்பு திறமையை காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டுவிட்டார். தொடர்ச்சியாக கமர்ஷியல் நாயகனாகவே வலம் வந்தார்.
இதையும் படிங்க: திடீரென நடந்த விபத்து!.. அதையும் தாண்டி சாதித்து காட்டிய ஜனகராஜ்!.. எல்லாமே ஹிட்டு!…
அவர் நடிப்பில் வெளியான அசுரன், வாத்தி போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. ஆனால் தனுஷ் சமீபகாலமாக தன்னுடைய பார்மில் இல்லை என்று தான் கூற வேண்டும். அவர் நடிப்பில் கடைசியான வெளியான கேப்டன் மில்லர் மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது.
தற்போது தனுஷ் ராயன் படத்தினை இயக்கி இருக்கிறார். அதை தொடர்ந்து தன்னுடைய அக்கா மகனை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தினை இயக்க இருக்கிறார். இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகும் 51வது படத்துக்கு குபேரன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெங்கடேஷ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷூடன், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி நடந்து வருகிறது.
இதையும் படிங்க: எல்லா படத்திலையும் செஞ்சாச்சு… இதுலையா மிஸ் பண்ணுவாரு.. விஜயின் பக்கா ப்ளான்!.
இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் பிச்சைக்காரராக தோன்றி அரசியல்வாதியாக மாறும்படி கதை அமைக்கப்பட்டு இருக்கிறதாம். மேலும், இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நாகர்ஜூனா நடிக்க இருக்கிறார். இருவருக்குமான மோதலே படத்தில் முக்கிய இடம் பிடிக்க இருக்கிறது. இப்படத்தில் தனுஷின் லுக் இதுவரை இல்லாத அளவு இருக்குமாம்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தினை இந்த வருடத்தின் இறுதிக்குள் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. சில தினங்கள் முன்னர் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கார்த்தியை கைது செய்த போலீஸ்!.. இனிமே அந்த தப்ப பண்ண மாட்டேன்!.. நடந்தது இதுதான்!..