தமிழ் சினிமாவில் ஒரு பிரமிக்க வைக்கும் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழி சினிமாக்களிலும் நடித்து ஒரு உலக அரங்கில் ஆச்சரியப்படும் அளவிற்கு சிறந்த நடிகராக உயர்ந்துள்ளார் தனுஷ். இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி படம் தமிழில் அந்த அளவுக்கு வரவேற்பை பெறாவிட்டாலும் தெலுங்கில் மக்களை திருப்தி படுத்தியது.
50வது படத்தின் சிறப்பு
அதனை எடுத்து கேப்டன் மில்லர் என்ற படத்திற்காக மிகவும் எத்தனை தயார்படுத்திக் கொண்டு வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அடுத்ததாக தனுஷ் இன்னும் பெயரிடப்படாத தன்னுடைய ஐம்பதாவது படத்திற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார்.

தற்காலிகமாக அந்தப் படத்திற்கு டி 50 என பெயரிடப்பட்டுள்ளது. அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கின்றது. மேலும் இந்தப் படத்தை தனுஷை இயக்குவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவரே இயக்கி அவரே நடிக்கும் 50 வது படமாக இது அமைய இருக்கிறது.
ஏற்கனவே இந்த படத்தில் சந்திப் கிஷன், துஷாரா விஜயன், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர்கள் நடிப்பதாக சில தகவல்கள் கசிந்தன. இப்போது இந்தப் படத்தைப் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கின்றது.
வில்லி நடிகையை லாக் செய்த தனுஷ்
அதாவது இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதலில் பாலிவுட் நடிகையான கங்கணா ரணாவத் இவரைத்தான் அணுகினார்களாம். ஆனால் அவர் மிகவும் பிசியாக இருப்பதால் அவர் இப்போது இந்த படத்தில் நடிக்கவில்லையாம். அதனை எடுத்து தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷாவை படக்குழு லாக் செய்து இருக்கிறது.

ஏற்கனவே தனுஷும் திரிஷாவும் கொடி என்ற படத்தின் மூலம் ஜோடியாக நடித்திருந்தனர். அதையும் தாண்டி தனுஷுக்கு ஒரு நெருக்கமான தோழியாகவும் திரிஷா இருந்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் இவர்கள் இந்த படத்தில் இணைவது குறித்து ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க : ‘மறு வார்த்தை பேசாதே’ பாடல் புகழ் மேகா ஆகாஷ் யாரை திருமணம் செய்யப் போறாங்க தெரியுமா?




