தனுஷின் கோபத்திற்கு காரணம் இதுதானா.?! அப்டியேவா காப்பி அடிப்பீங்க.?! பதறிப்போன படக்குழு.!

by Manikandan |
தனுஷின் கோபத்திற்கு காரணம் இதுதானா.?! அப்டியேவா காப்பி அடிப்பீங்க.?! பதறிப்போன படக்குழு.!
X

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் OTT வசமாகி வருகின்றன. ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம், தற்போது மாறன், அடுத்து தயாராகும் ஹாலிவுட் திரைப்படமான தி க்ரே மென் என தனுஷ் படங்கள் OTT வசம் செல்கின்றன.

இதில், தனுஷ் விருப்பமில்லாமல் சில படங்கள் வந்தாலும், சில படங்களை தனுஷே OTTக்கு பரிந்துரைத்துள்ளாராம். அதில் ஒன்று தான் மாறன். இந்த படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே , இயக்குனருக்கும், தனுஷிற்கும் பிரச்சனை எழுந்ததாக கூறப்பட்டது.

இதையும் படியுங்களேன் - அட்லீக்கு ஒரு நியாயம்.! H.வினோத்துக்கு ஒரு நியாயமா.? கொந்தளித்த விஜய் ரசிகர்கள்.!

அதன் பின்னர், படத்தின் பைனல் அவுட் தனுஷிற்கு பிடிக்கவில்லையாம். அதனால் அவரே OTTக்கு இப்படத்தை பரிந்துரைத்ததாக கூறப்பட்டது. தற்போது அதனை நிரூபிக்கும் வண்ணமே படத்தின் டிரைலரும் வந்தாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. அதில், தனுஷ், மாளவிகா இருவரும் பத்திரிகையாளர்களாக வருகின்றனர். ஒரு அரசியல்வாதியை எதிர்த்து தனுஷ் போராடுகிறார். என்பது போல காட்டப்பட்டுள்ளது. இதனை பார்த்ததும், ஜீவா நடித்து, மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தின் ட்ரைலரை பார்த்தது போல இருக்கிறது. இதனால் தான் தனுஷ் படத்தினை OTTக்கு கொடுக்க சிபாரிசு செய்தார் போல என ரசிகர்கள் இணையத்தில் சிலாகித்து வருகின்றனர்.

Next Story