மாறன் படத்தால் தமிழ் சினிமாவுக்கு தனுஷ் வைத்த ஆப்பு!...இது என்னடா சோதனை!....

இரண்டு வருட கொரோனா தாக்கம் சினிமா துறையை பலமாக தாக்கியுள்ளதா ? அல்லது கொஞ்சம் சிறு தயாரிப்பாளர்களை காப்பாற்றயுள்ளதா என தெரியவில்லை. இருந்தாலும் எதுவும் நல்லதுக்கே. பெரிய திரைப்படங்களே இங்கு தியேட்டர் கிடைக்காமல் ரிலீஸ் தேதியை மாத கணக்கில் தள்ளிவைக்கின்றன.
அப்படி இருக்கையில், சிறு படங்களில் நிலைமை தியேட்டர் ரிலீஸ் எனும்போது கொஞ்சம் மோசமாக தான் இருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் OTT நிறுவனங்களில் தாறுமாறான வளர்ச்சி , சிறு தயாரிப்பாளர்களுக்கு நல்ல பலனையே கொடுத்துள்ளது என கூறலாம்.
பெரிய ஹீரோ படங்களே OTTயில் வெளியாகி வருகிறது. தற்போது அதற்கு ஆப்பு வைக்கும் விதமாக தான் தனுஷின் மாறன் திரைப்படம் அமைந்துவிட்டது. இதுவரை பெரும்பாலும் OTT நிறுவனங்கள் படங்களை யார் இயக்கியுள்ளார் , யார் இயக்குனர் இதற்கு முன் என்ன படம் எடுத்துள்ளார்கள் என்று மட்டுமே பார்த்து வந்தனர்.
ஆனால், சமீபத்தில் வெளியான மாறன் திரைப்படம் அதனை எல்லாம் அப்படியே மாற்றிவிட்டது. அப்படத்தை ஹாட்ஸ்டாரில் பதிவிறக்கம் செய்த பார்த்தவர்கள் ஒரு அரை மணி நேரத்திலேயே அதிலிருந்து வெளியேறி ஹாட்ஸ்டாருக்கு ஷாக் கொடுத்துவிட்டனராம். அதனால் இனி , யாரு படம் வந்தாலும் அதனை பார்த்துவிட்டு தான் வாங்க வேண்டும் என OTT நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளதாம்.
இதையும் படியுங்களேன் - இந்தா ஆரம்பிச்சிட்டாங்களே.! பீஸ்ட் முதல் நாள் டிக்கெட் விலை 1500 மட்டுமே.! எங்கு தெரியுமா?
மாறன் படத்தை, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். தனுஷ் நடிக்கிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இயக்குனர் படத்திலிருந்து விலகி, தனுஷ் இப்படத்தை இயக்கினார் எனும் அளவுக்கு செய்திகள் வெளியாகின. அந்தளவுக்கு சர்ச்சைகளை சந்தித்த திரைப்படம் மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.