Cinema News
சிம்புவின் STR48-க்கு போட்டியாக தனுஷின் புதிய படம்?.. மாரி செல்வராஜ் கொடுத்த தரமான அப்டேட்!
Published on
By
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி படங்களை அடுத்து நடிகர் தனுஷ், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தயாரிக்கிறது. ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.
கேப்டன் மில்லர் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.
இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் பீரியட் படமாக உருவாகிறது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜான் கொக்கன், சந்தீப் கிஷன், நிவேதிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டர் நாகூரன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள
, த.ராமலிங்கம் கலை இயக்குனராக பணிபுரிய உள்ளார். மாஸ்டர் திலீப் சுப்பராயன், சண்டை காட்சி இயக்கத்தை கவனிக்க உள்ளார், இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.
இதை அடுத்து தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய போஸ்டர் மூலம் சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த படத்தை தனுஷ் இயக்கி நடிக்க உள்ளார்.
மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் புதிய படமும் உருவாக உள்ளது. இந்த படம் வரலாற்று பிண்ணனியில் உருவாக உள்ளது என மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். மேலும் தனுஷ் மற்றும் எனக்கு முக்கியமான படமாக இது இருக்கும் என்றும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். தனுஷின் போட்டியாளரான சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிக்கும் புதிய படமும் வரலாற்று பிண்ணனியில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Actor sarathkumar : திரைப்பட வினியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் நுழைந்தவர் சரத்குமார். ஆனால், அது கிளிக் ஆகாமல் போகவே நடிகராக...
மகேஷ் பாபுவின் ஒக்கடு, போக்கிரி படங்களை ரீமேக் செய்து தமிழில் முன்னணி நடிகராக மாறி விஜய்க்கு இயக்குநர் அட்லி எல்லாம் புதுப்...
ஆர்ஆர்ஆர் பார்த்துட்டு என்னை ஹாலிவுட்டுக்கு கூப்பிட்டாங்கன்னு போகாம ஷங்கரை நம்பி பல ஆண்டுகளை வீணடித்து விட்டார் ராம்சரண் என அவரது ரசிகர்கள்...
ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமே இசையமைப்பாளர் அனிருத் தான். இசை சேர்ப்பதற்கு முன்னதாக ஜெயிலர் திரைப்படம் அபவ்...
தமிழ் சினிமாவின் இளைய தளபதி என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்....