Kara: தனுஷின் புதிய படம் கர!.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே வேறலெவல்!…

Published on: January 15, 2026
dhanush
---Advertisement---

துள்ளுவதோ இளமை திரைப்படம் படம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அதன்பின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்தார்.

தொடர்ந்து பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஒரு பக்கம் கமர்சியல் மசாலா படங்களிலும் ஒருபக்கம் ஆடுகளம், வட சென்னை, அசுரன், கர்ணன் போன்ற கலையம்சம் கொண்ட படங்களிலும் நடித்து வரும் நடிகர் இவர். இதுவரை 2 தேசிய விருதுகளை வாங்கியிருக்கிறார்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இதுவரை நான்கு ஹிந்திதிரைப்படங்களில் நடித்து விட்டார். தற்போது போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்த படத்திற்கு கர என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.